ஜம்முவில் இன்று அதிகாலை ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து நார்வால் எனும் பகுதியிலிருந்து 4 கிலோ எடை கொண்ட நாட்டு வெடிகுண்டு கைப்பற்றப்பட்டுள்ளது.
ஜம்முவில் உள்ள விமானப் படை தளத்தில் இன்று அதிகாலை வெடிப்பொருட்கள் நிரப்பிய ட்ரோன் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. ஒரு வெடிகுண்டு விமானப்படை தளத்தின் கூரை மீது விழுந்தது. இதில் விமானப்படை வீரர்கள் இருவர் காயமடைந்தனர். மற்றொரு குண்டு திறந்தவெளியில் விழுந்தது.
பெரும் சேதங்கள் தவிர்க்கப்பட்டாலும் கூட ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் நார்வால் பகுதியில் இருந்து 4 கிலோ எடை கொண்ட நாட்டு வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நதீம் உல் ஹக் என்ற 22 வயது இளைஞரிடமிருந்து இது கைப்பற்றப்பட்டுள்ளது.
இதுவும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் தாக்குதல் நடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக ஜம்மு காஷ்மீர் காவல்துறை தலைவர் தில்பக் சிங் தெரிவித்துள்ளார்.
காலையில் ட்ரோன் மூலம் தாக்குதல், பின்னர் நாட்டு வெடிகுண்டு கைப்பற்றப்பட்டது என ஜம்மு காஷ்மீரில் நடந்த இந்த இரண்டு சம்பவங்களும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியாவில் ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட முதல் தாக்குதல் இதுவென்பதால் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இச்சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களிலும் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
52 mins ago
இந்தியா
59 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago