தொடர் சீர்திருத்த நடவடிக்கைகளால் எளிதாக தொழில் தொடங்கும் நாடாக இந்தியா மாறி வருகிறது: அந்நிய முதலீட்டாளர்களிடம் நிதியமைச்சர் தகவல்

இந்தியா-அமெரிக்கா உத்திசார் கூட்டமைப்பு (யுஎஸ்ஐஎஸ்பிஎப்) ஏற்பாடு செய்திருந்த வட்ட மேசை ஆலோசனைக் கூட்டத்தில் நேற்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:

நாட்டின் நிதிப் பற்றாக்குறை கட்டுக்குள் உள்ளது. இது மேலும் முன்னேற்றமான கட்டத்தை எட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. கரோனா பாதிப்புக்குப் பிறகு இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையை நோக்கி முன்னேறி வருகிறது, இதன் வெளிப்பாடாக சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் அதிகரித்துள்ளது. புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாவதற்கான சூழல் அதிகரித்துள்ளது. அமெரிக்க முதலீட்டாளர்களிடையே சுமுகமான சூழல் நிலவுகிறது. இதனால் இருதரப்பு கூட்டத்தை ஆண்டுக்கு இருமுறை நடத்தலாம்.

இதைபோல நிதித்துறை சீர்திருத்தங்கள் காரணமாக இதிலும் முன்னேற்றம் தெரிகிறது. இவை அனைத்துமே சர்வதேச அரங்கில் இந்தியாவை வலிமை மிகுந்த பொருளாதார நாடாக பரிமளிக்க உதவும் காரணிகளாகும். நாட்டில் கரோனா பரவல் இரண்டாவது அலையின் தீவிரமும் குறைந்துள்ளது. கரோனா தடுப்பூசி தயாரிப்பிலும் இந்தியா சுயசார்புடன் திகழ்கிறது.

இத்தகைய அறிகுறிகள் அனைத்துமே பேரியல் பொருளாதார ஸ்திர நிலை காரணிகளாகும். கட்டமைப்பு சார்ந்த பொருளாதார நடவடிக்கைகள் இப்போது முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. ஒவ்வொரு துறையும் வெளிநாட்டு முதலீட்டுக்கு ஏற்றதாக மாறி வருகிறது. இதற்கேற்ப கடந்த 6 ஆண்டுகளில் சீர்திருத்த நடவ டிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இணையதள இணைப்பு, ஒருங்கிணைந்த வளர்ச்சி, முதலீடு, கட்டமைப்பு,புத்தாக்கம் உள்ளிட்ட ஐந்து `எஸ்'-களுக்கு முக்கி யத்துவம் அளிக்கப்படுகிறது.

இவ்வாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். - பிடிஐ

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE