கரோனா வைரஸ் டெல்டா பிளஸ்; நடவடிக்கை என்ன?- மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி

By செய்திப்பிரிவு

உருமாறிய கரோனா வைரஸ் டெல்டா பிளஸ் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மத்திய அரசிடம் மூன்று கேள்விகளை முன் வைத்துள்ளார்.

நாடுமுழுவதும் கரோனா இரண்டாவது அலை ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டபோது மத்திய அரசு அதனை சரியான முறையில் கையாளவில்லை என காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது.

மத்திய அரசின் தடுப்பூசித் திட்டம் குறித்தும், பிரதமர் மோடியின் திட்டமிடல் இல்லாத செயல் குறித்தும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார். தடுப்பூசி செலுத்துவது மெதுவாகச் சென்றால் அடுத்தடுத்து கரோனா அலையை எதிர்கொள்ள நேரிடும் எனவும் எச்சரித்தார். இதற்கு பாஜக தலைவர்களும், மத்திய அமைச்ச்களும் கடும் பதிலடியும் கொடுத்தனர்.

இந்தநிலையில் ராகுல் காந்தி இன்று டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து மத்திய அரசுக்கு ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

டெல்டா பிளஸ் வகை கரோனா பரவுவதைத் தடுக்க பெரிய அளவில் ஏன் சோதனை செய்யப்படவில்லை?
தடுப்பூசிகள் இதற்கு எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும்? இதுகுறித்த முழு தகவல்கள் எப்போது கிடைக்கும்?
மூன்றாவது அலையைக் கட்டுப்படுத்தும் திட்டம் என்ன?

இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

18 mins ago

இந்தியா

44 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்