தமிழகத்துக்கு 33.19 டிஎம்சி காவிரி நீர் திறக்க வேண்டும்: கர்நாடகாவுக்கு காவிரி ஆணையம் உத்தரவு

By செய்திப்பிரிவு

காவிரியில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 33.19 டிஎம்சி தண்ணீரை திறந்து விட கர்நாடகாவுக்கு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் 12-வது கூட்டம் காணொலி வாயிலாக நடந்தது. தமிழக அரசு சார்பில் கூடுதல் தலைமைச் செயலாளர் (பொதுப்பணித்துறை) சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன், நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, அரசு சிறப்பு செயலாளர் அசோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். புதுச்சேரி, கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்தும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என கர்நாடக வலியுறுத்தியது. இதற்கு தமிழகம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மேலும் கர்நாடக அரசு உரிய முறையில் காவிரி நீரை வழங்கவில்லை என தமிழக அரசு சார்பில் குற்றம்சாட்டப்பட்டது.

உச்சநீதிமன்ற ஏற்கெனவே உத்தரவுப்படி காவிரியில் தமிழ்நாட்டுக்கு ஜூன் மற்றும் ஜூலை மாதம் திறந்து விட வேண்டிய 33.19 டி.எம்.சி., தண்ணீரை திறந்து விட வேண்டும் என கர்நாடகாவுக்கு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்