உ.பி.யின் மேற்குப் பகுதியில் 450 தாதா கும்பல்கள்: பாஜக தலைவர்கள் கொலை வழக்கு விசாரணையில் அதிர்ச்சி தகவல்

By ஆர்.ஷபிமுன்னா

உத்தரப் பிரதேச மாநிலம் மேற்கு பகுதியில் மட்டும் சுமார் 450 ‘தாதா’ கும்பல்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நொய்டா மற்றும் முசாபர்நகரில் கொல்லப்பட்ட பாரதிய ஜனதா தலைவர்கள் தொடர்பான வழக்கின் விசாரணையில் இது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து 'தி இந்து'விடம் டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவு அதிகாரிகள் வட்டாரம் கூறு கையில், ‘‘பாஜக மூத்த தலைவர் விஜய் பண்டிட், கூலிப்படையி னரால் சமீபத்தில் சுட்டுக் கொல்லப் பட்டார். இதுதொடர்பான விசார ணையில் மேற்குப்பகுதியில் மட்டும் 450 தாதா கும்பல்கள் இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

பாஜக தலைவர்கள் மீது தாக்குதல் நடைபெற்ற நகரங்கள் டெல்லிக்கு மிக அருகில் இருப்பதை அவர்கள் சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர். தலைநகரில் குற்றங்களை செய்து விட்டு, அருகில் உள்ள தங்கள் மாவட்டங்களில் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் தலைமறைவாகி விடுகின்றனர்’’ என்றனர்.

இதில் பணத்துக்காக ஆட்களை கடத்துவதும், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்களை கூலிக்காக கொலை செய்வதும் பத்துக்கு மேற்பட்ட கும்பல்களின் முக்கியப் பணி எனவும், இதற்காக கள்ளத்துப்பாக்கிகளை பிஹாரின் முங்கேரில் இருந்து கடத்தி வருவதாகவும் அந்த அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் டெல்லியின் எல்லையில் உள்ள காஜியாபாத், முசாபர்நகர், பாக்பத், மீரட் மற்றும் அலிகர் ஆகிய நகரங்களைச் சேர்ந்தவர் கள் என்பது இந்த அதிகாரிகள் அளிக்கும் தகவலின் பேரில் தெரியவந்துள்ளது. இதில், மீதம் உள்ள கும்பல்கள் உபியின் மேற் குப் பகுதியில் உள்ள நகரங் களில் உள்ளூரிலேயே கொலை, கொள்ளை போன்ற சமூகவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாக, திருட்டு, நகை பறிப்பு மற்றும் வழிப்பறி போன்றவை அப்பகுதிவாசி களுக்கு அன்றாட வாழ்வின் அங்கமாக உள்ளது.

இந்த கும்பல்களுக்கு பணம் மட்டும் குறிக்கோள் இல்லை. தங்கள் நகர எல்லைகளில் குறிப்பிட்ட அரசியல்வாதிகள் மற்றும் சமூகங்களின் மீதான அச்சத்தை நிலை நிறுத்துவதும் இவர்களது நோக்கமாகும். மும்பை நிழல் உலக தாதாக்கள் போல் வளர்ந்துவிட்ட இந்த கும்பல்களை பிடிக்க தற்போது உபி அரசு தனிப்படை அமைக்க ஆலோசனை செய்து வருகிறது. இதற்கு அதன் கட்சித் தலைவர்களில் சிலரே தடையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், உபி போலீஸாரின் தேடுதல் வேட்டையை அறிந்த முக்கியமான தாதா கும்பல்கள், உபியின் மேற்குப்பகுதியை ஒட்டியுள்ள உத்தரகண்ட் மாநிலத்தில் தஞ்சம் புகுந்து விட்டனர். அங்கும் தங்கள் வலையை வீசிய டெல்லி குற்றப்பிரிவு போலீஸாரிடம், கடந்த 4 வருடங்களாக தப்பி வந்த 28 வயது ஹாசீம் எனும் கூலிப்படை தலைவன் ராம்நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து ‘தி இந்து'விடம் அப்பிரிவின் கூடுதல் ஆணையர் அசோக் சந்த் கூறுகையில், ‘‘போலீஸாரால் தலைக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவித்துள்ள இவருக்கு பாவா, பக்கீரா அசீம் எனவும் வேறு பெயர்கள் உண்டு. பல கொலை, ஆள் கடத்தல் வழக்குகள் ஹாசீம் மீது பதிவாகி உள்ளன. இவற்றை செய்துவிட்டு மும்பை போன்ற பெரிய நகரங்களில் மறைந்து கொள்வது அவன் பாணி’’ எனக் கூறுகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்