ஜம்மு காஷ்மீரில் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்க மெஹபூபா முப்தி, பரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த கூட்டம் தொடர்பான சில முக்கிய தகவல்கள்:
1) காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பாக விவாதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின.
2) ஆனால் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமான காஷ்மீரில் தேர்தல் நடத்த ஏதுவாக தொகுதி மறுவரையறை தொடர்பாக விவாதிக்கப்பட இருப்பதாக பின்னர் தகவல் வெளியானது.
3) ஜம்மு - காஷ்மீர் ரத்து செய்யப்பட்டதை விலக்கி கொள்ள வேண்டும், 2019 ஆகஸ்ட் மாதத்திற்கு முந்தைய நிலையை திரும்ப வேண்டும் என குப்கர் கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
4) இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கும், தலிபான்களுக்கும் இடையே அண்மையில் கத்தாரில் ரகசிய சந்திப்பு நடந்ததாக தெரிகிறது. மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெஹபூபா முப்தி அண்மையில் இதனை சுட்டிக்காட்டி இருந்தார்.
5) ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் செப்டம்பர் மாதம் முழுமையாக வெளியேற முடிவு செய்துள்ளன. இதன் காரணமாக தலிபான்களின் ஆதிக்கம் மீண்டும் எழ வாய்ப்புள்ளது. இதன் தாக்கம் காஷ்மீரில் இருக்கக்கூடாது என்பதற்காக முன்கூட்டியே சில நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
6) காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் பாஜக தலைவர் நட்டா அம்மாநில பாஜக நிர்வாகிகளுடன் இன்று காலை ஆலோசனையில் ஈடபட்டார்.
7) இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தும், மாநில தலைவர் குலாம் அகமது மிர், தாரா சந்த் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். இதற்காக அவர்கள் இன்று காலை ஆலோசனை நடத்தினர்.
8) அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்றே்பதற்காக காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பெரும்பாலான கட்சிகளின் தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
9) பிரதமர் மோடி தலைமையில் நடைபெறம் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காஷ்மீரைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
10) காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு தேர்தல் எப்போது நடத்த வாய்ப்புள்ளது என்பது குறித்து விவாதிக்கப்பட அதிகம் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago