டாக்டர்கள் தொடர்ந்த வழக்குகள்; உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி பாபா ராம்தேவ் மனு

By செய்திப்பிரிவு

தனக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் டாக்டர்கள் தொடர்ந்த வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றுக்கோரி பாபா ராம்தேவ் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அலோபதி மருத்துவம், கரோனா தடுப்பூசி குறித்து யோகாகுரு பாபா ராம்தேவ் சமீபத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகள் தெரிவித்திருந்தார். தடுப்பூசி குறித்து தவறான தகவல்களைக் கூறியும், அலோபதி மருத்துவத்துக்கு எதிராக அவதூறுகளைத் தெரிவித்துவரும் பாபா ராம்தேவ் மீது தேசதுரோக குற்றச்சாட்டின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவக் கூட்டமைப்பு கடிதம் எழுதியிருந்தது.

இந்திய மருத்துவ சங்கத்தின் உத்தரகாண்ட் பிரிவு, அலோபதி குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பாக பாபா ராம்தேவுக்கு எதிராக ரூ.1,000 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

அலோபதி மருத்துவத்துக்கும், மருத்துவர்களுக்கும் எதிராக அவதூறு கருத்துகளை யோகா குரு பாபா ராம்தேவ் கூறியதற்கு எதிராக, டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் தங்கிப் பணியாற்றும் ரெஸிடெனட் மருத்துவர்கள் கூட்டமைப்பு மருத்துவர்கள் கருப்புப் பட்டை அணிந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

பாபா ராம்தேவுக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளிலும் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த நிலையில் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் தொடரப்பட்டுள்ள வழக்குகளை எல்லாம் உச்சநீதி மன்றத்துக்கு மாற்றும்படி உச்சநீதிமன்றத்தில் பாபா ராம்தேவ் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

2 days ago

மேலும்