கரோனா தடுப்பூசிகளை பதுக்கி வைத்து பின்னர் மொத்தமாக போடும் சாதனைக்காக மோடி அரசுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசே கொடுக்கலாம் என்று மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
இந்தியாவில், கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு வகையான தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுதவிர ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. ஜூன் 21-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. முதல் நாளில் இதுவரை இல்லாத அளவு 86.16 லட்சம் (86,16,373) பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்த எண்ணிக்கை உலக அளவில் ஒரே நாளில் தடுப்பூசி செலுத்தப்பட்ட எண்ணிக்கையில் சாதனை அளவாகும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் அடுத்த நாளான நேற்று 50 லட்சம் மட்டுமே போடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
» பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸே காரணம்: மத்திய அமைச்சர் விளக்கம்
» டெல்டா பிளஸ் பரவல்: ம.பி., கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்
இதனை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
‘‘ஞாயிற்றுக்கிழமையன்று பதுக்கி வையுங்கள்; திங்கள்கிழமையன்று தடுப்பூசி போடுங்கள்; செவ்வாய்க்கிழமை பழைய நிலைமைக்கே செல்லுங்கள். இதுதான் ஒருநாள் கரோனா தடுப்பூசி சாதனையில் ரகசியம்.
இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கப்பட வேண்டும். ஏன் மோடி அரசுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசும் கொடுக்கலாம்.
மோடி ஹை.. மும்ஹின் ஹை என்பதை மோடி ஹை மிராக்கிள் என மாற்றிப் படிக்க வேண்டும்.
இவ்வாறு ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
53 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
4 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago