அடுத்த ஆண்டு நடைபெறும் உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகளின் புதிய அணியை உருவாக்குவது தொடர்பாக சரத் பவார் தலைமையில் இன்று முக்கிய கட்சித் தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர்.
அண்மையில் முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் தமிழகம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள் முக்கியத்துவம் பெற்றன. இங்கு திமுக மற்றும் திரிணமூல் காங்கிரஸுக்காக பிரச்சார வியூகம் அமைத்தார் பிரஷாந்த் கிஷோர்.
ஆனால் அரசியல் வியூகப் பணியில் இருந்து விலகப் போவதாகவும், இனிமேல் குடும்பத்தினருடன் காலத்தைச் செலவிடவுள்ளேன், ஐபேக் நிறுவனத்தை அதில் உள்ள மற்ற நண்பர்கள் நடத்துவார்கள் என்று பிரசாந்த கிஷோர் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது பிரசாந்த் கிஷோர் மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை அண்மையில் சந்தித்துப் பேசினார்.
» காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததை ஏற்க முடியாது: குப்கர் தலைவர்கள் உறுதி
» நாரதா வழக்கு: மம்தா மேல்முறையீட்டில் இருந்து விடுவித்துக்கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி
மிஷன் 2024 எனப்படும் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டிய திட்டமிடல் என தகவல் வெளியானது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்த்து வலிமையுடன் போராட எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிப்பது பற்றியும் எதிர்க்கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளர் குறித்து இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகின.
இதனைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், பிரசாந்த் கிஷோரை நேற்று மீண்டும் சந்தித்து பேசினார்.
இதனைத் தொடர்ந்து திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா மற்றும் ராஷ்ட்ரீய ஜனதாதளக் கட்சியின் மூத்த தலைவர் ஜா ஆகியோருடனும் சரத் பவார் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு சரத் பவார் அழைப்பு விடுத்தார்.
அதன்படி சரத் பவார் வீட்டில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, இடதுசாரி கட்சிகள் உள்ளிட்டவை பங்கேற்றன.
கூட்டத்தில் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் வலிமையான கூட்டணி ஒன்றை உருவாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளர் குறித்தும் யார் என்பது பற்றியும் ஆலோசனைகள் நடந்தன.
அடுத்த ஆண்டு உ.பி. சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்பாக எதிர் கட்சிகளின் கூட்டணியை உருவாக்குவது பற்றியும், உ.பி. தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வியூகம் வகுப்பது பற்றியும் முதல்கட்ட ஆலோசனைகள் நடைபெற்றுள்ளன. ஆனால் இந்த கூட்டத்தில் பகுஜன் சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கவில்லை.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago