திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் சினிமா, விளையாட்டு நட்சத்திரங்கள்

By செய்திப்பிரிவு

நாடாளுமன்றத் தேர்தலில் திரைப்படம் மற்றும் விளையாட்டு நட்சத்திரங்களை களமிறக்கியுள்ளது மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ்.

அக்கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலில் 5 பிரபல திரை நட்சத்திரங்கள், இரு பாடகர்கள், இரு முன்னாள் கால்பந்து வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

பெங்காலி சூப்பர் ஸ்டார் தேவ், நடிகை மூன் மூன் சென், கால்பந்து வீரர் பாய்ச்சுங் பூட்டியா ஆகியோர் இதில் குறிப்பிடத்தக்கவர்கள். டார்ஜிலிங் ஹில்ஸ் தொகுதியில் பூட்டியாவும், ஹௌரா தொகுதியில் மற்றொரு கால்பந்து வீரர் பிரசன் பானர்ஜியும் போட்டியிடுகின்றனர்.

நடிகை மூன் மூன் சென், பங்குரா தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். நடிகை சந்தியா ராய் மிதினபூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

பாடகர்கள் சவுமித்ர சென், இந்திரனில் சென் ஆகியோருக்கும் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நேதாஜி சுபாஸ் சந்திர போஸின் கொள்ளுப் பேரனும், பேராசிரியருமான சுகாதா போஸ், ஜாதய்பூரில் களமிறங்குகிறார்.

பல்வேறு பின்னணி களையும், வெவ்வேறு கலாசார உலகையும் சேர்ந்த வர்கள் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிடு கிறார்கள் என்று வேட்பாளர்களை அறிவித்துப் பேசிய மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்