உ.பி. பாஜக துணை தலைவரானார் ஏ.கே.சர்மா: பிரதமர் மோடியின் அபிமானம் பெற்றவர்

By ஏஎன்ஐ

உத்தரப் பிரதேச மாநில பாஜக துணை தலைவராக ஏ.கே.சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். அரசு அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற இவர் பாஜகவில் ஐக்கியமானார்.

பின்னர் உபி சட்டப்பேரவை மேலவையின் உறுப்பினராக ஆனவர் தற்போது அம்மாநில பாஜகவின் துணை தலைவராகவும் ஆகியிருக்கிறார்.

குறுகிய காலத்தில் அவர் அடுத்தடுத்த உயர் பதவிகளை அடைய, பிரதமர் நரேந்திர மோடியின் அபிமானத்தைப் பெற்றதே காரணம் எனக் கூறப்படுகிறது.

பிரதமர் மட்டுமல்ல உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் நன்மதிப்பையும் அவர் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்காக அவர் கடந்த ஒரு மாதமாகவே, பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில் முகாமிட்டு கரோனா நிவாரணப் பணிகளை பார்வையிட்டு வந்தார்.

அண்மையில் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக உத்தரப்பிரதேசத்தில் உட்கட்சிப் பூசல் எழுந்தபோது, ஏ.கே.சர்மாவை ஆதித்யநாத்துக்கு மாற்றாக கட்சித் தலைமைக்குக் கொண்டுவர டெல்லி மேலிடம் முற்படுவதாக சலசலக்கப்பட்டது.

பின்னர் யோகி ஆதித்யநாத் டெல்லி சென்று நட்டா, மோடி, அமித் ஷா என அதிரடியாக அனைவரையும் சந்தித்துவிட்டு உட்கட்சிப் பூசலுக்கு தற்காலிக நிவாரணம் தேடிவந்தார்.

இந்நிலையில், சர்மா உ.பி. பாஜக துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது யோகி ஆதித்யநாத்துக்கு தலைவலியாகவே அமையும் எனக் கருதப்படுகிறது.

தான் உத்தரப் பிரதேச பாஜகவின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறித்து ஏ.கே.சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில், "என்னை துணை தலைவராக தேர்ந்தெடுத்தமைக்கு மத்திய, மாநில பாஜக தலைமை அதிகாரிகளுக்கு, நன்றி. நண்பர்களின் உறுதுணையுடன் கட்சியின் மூத்தவர்களின் வழிகாட்டுதலுடன், சமூகத்துக்கும், இம்மாநிலத்திற்க்கும், நம் நாட்டுக்கும் சிறந்த முறையில் பங்காற்றுவேன்” எனக் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்