வாகனங்களுக்கு  நாடுமுழுவதும் ஒரே வடிவத்தில் பியூசி சான்றிதழ்: மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு

By செய்திப்பிரிவு

வாகனங்கள் வெளியிடும் புகையின் அளவை மதிப்பிட்டு வழங்கப்படு்ம் பியூசி எனப்படும் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழை நாடு முழுவதும் ஒரே வடிவத்தில் வழங்குவது குறித்த அறிவிக்கையை வெளியிட்டது மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் இன்று வெளியிட்டடது.

மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989 இன் கீழ் நாடு முழுவதும் மாசு கட்டுப்பாட்டில் உள்ள (பியூசி) சான்றிதழின் பொதுவான வடிவமைப்புக்கான அறிவிக்கையை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் 14 ஆம் தேதி வெளியிட்டது.

பியூசி சான்றிதழின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

1. தேசிய பதிவேட்டுடன் பியூசி தரவை இணைப்பதற்காக நாடு முழுவதும் ஒரே சீரான சான்றிதழின் வடிவமைப்பை அறிமுகப்படுத்துவது.

2. முதல்முறையாக, நிராகரிப்புச் சீட்டு அறிமுகப்படுத்தப்படுகிறது. சோதனையின்போது சம்பந்தப்பட்ட நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள அதிகபட்ச மதிப்பை விட கூடுதலான மதிப்பு இருக்கும் வாகனத்தின் உரிமையாளருக்கு நிராகரிப்புச் சீட்டு பொதுவான வடிவமைப்பில் அளிக்கப்படும்.

வாகன பழுதுபார்க்கும் நிலையங்களில் இந்த ஆவணத்தைக் காண்பிக்கலாம். மற்றொரு மையத்தில் சோதனை செய்யும் போது, பியூசி சான்றிதழ் மையக் கருவி பழுதடைந்திருந்தால் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

3. வாகனம் சம்பந்தமான தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் அதாவது, (i) வாகன உரிமையாளரின் செல்பேசி எண், பெயர் மற்றும் முகவரி, (ii) இன்ஜின் எண் மற்றும் சேசிஸ் எண் (கடைசி நான்கு எண்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கும், எஞ்சியவை மறைக்கப்பட்டிருக்கும்).

4. வாகன உரிமையாளரின் செல்பேசி எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சரிபார்ப்பு மற்றும் கட்டணம் சம்பந்தமான தகவல்கள் குறுஞ்செய்தி வாயிலாக அந்த எண்ணிற்கு அனுப்பப்படும்.

5. வெளியீட்டு தர நிர்ணயங்களுக்கு உட்படாத மோட்டார் வாகனங்களை அங்கீகரிக்கப்பட்ட பியூசி சோதனை நிலையங்களில் சோதனை செய்வதற்காக வாகனம் பற்றிய தகவல்களை அமலாக்க அதிகாரி எழுத்துப்பூர்வமாகவோ, அல்லது மின்னணு வாயிலாகவோ ஓட்டுனர் அல்லது பொறுப்பாளருக்கு நேரடியாக அனுப்பிவைப்பார். வாகன ஓட்டியோ அல்லது அதன் பொறுப்பாளரோ இதற்கு இணங்கவில்லை என்றாலோ அல்லது வாகனம் இசைந்து கொடுக்கவில்லை என்றாலோ வாகன உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும்.

வாகன உரிமையாளர் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றால், பியூசி சான்றிதழ் வழங்கப்படும் வரையில் வாகனத்தின் பதிவு சான்றிதழையும், அதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதிகளையும் பதிவு செய்யும் அதிகாரி நிறுத்திவைக்கக் கூடும்.

6. தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால், மாசு வெளியிடும் வாகனங்களை திறம்பட கண்காணிக்க முடியும்.

7. படிவத்தில் க்யூ ஆர் குறியீடு அச்சிடப்பட்டிருக்கும். பியூசி மையம் குறித்த முழு தகவல்களும் அதில் இடம்பெற்றிருக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

மேலும்