பிரசாந்த் கிஷோரின் துணையின்றி  2019  தேர்தலில் பாஜக 304 இடங்களில் வென்றது: ராம்தாஸ் அத்வாலே 

By செய்திப்பிரிவு

2019 மக்களவைத் தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் துணையின்றி பாஜக தனிப்பெரும் கட்சியாக 304 இடங்களில் வெற்றி பெற்றது, 2024 மக்களவைத் தேர்தலிலும் மகத்தான வெற்றி பெறும் என இந்திய குடியரசுக் கட்சித் தலைவரும் மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே கூறினார்.

அண்மையில் முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் தமிழகம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள் முக்கியத்துவம் பெற்றன. இங்கு திமுக மற்றும் திரிணமூல் காங்கிரஸுக்காக பிரச்சார வியூகம் அமைத்தார் பிரஷாந்த் கிஷோர்.

ஆனால் அரசியல் வியூகப் பணியில் இருந்து விலகப் போவதாகவும், இனிமேல் குடும்பத்தினருடன் காலத்தைச் செலவிடவுள்ளேன், ஐபேக் நிறுவனத்தை அதில் உள்ள மற்ற நண்பர்கள் நடத்துவார்கள் என்று பிரசாந்த கிஷோர் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது பிரசாந்த் கிஷோர் மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை அண்மையில் சந்தித்துப் பேசினார். இதுபற்றிப் பிரசாந்த் கிஷோர் தரப்பில் கூறும்போது, ''மேற்கு வங்கம் மற்றும் தமிழகத் தேர்தலில் மம்தா மற்றும் ஸ்டாலினுகு ஆதரவுக் கரம் நீட்டிய ஒவ்வொரு எதிர்க்கட்சித் தலைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாகவே இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது'' என்று தெரிவித்தனர்.

மிஷன் 2024 எனப்படும் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டிய திட்டமிடல் என தகவல் வெளியானது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்த்து வலிமையுடன் போராட எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிப்பது பற்றியும் எதிர்க்கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளர் குறித்து இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகின.

இதுகுறித்து இந்திய குடியரசுக் கட்சித் தலைவரும் மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே கூறியதாவது:

2019 மக்களவைத் தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் துணையின்றி தான் பாஜக தனிப்பெரும் கட்சியாக 304 இடங்களில் வெற்றி பெற்றது. 2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியின் தலைமைக்கே மக்கள் ஆதரவளிப்பார்கள். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்பார். எதிர்க்கட்சிகள் ஒற்றுமயைாகவும் இல்லை. எனவே எதிர்க்கட்சிகளின் கனவு எதுவும் பலிக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

14 mins ago

இந்தியா

9 mins ago

இந்தியா

56 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்