தமிழகத்திற்கு 4941 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம்: மத்திய அரசு தகவல்

By செய்திப்பிரிவு

தமிழகத்திற்கு 4941 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு:

பல்வேறு தடைகளையும் கடந்து நாடு முழுவதும் திரவ மருத்துவப் பிராணவாயுவை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் மூலம் இந்திய ரயில்வே விநியோகித்து வருகிறது.

30000 மெட்ரிக் டன்னிற்கும் அதிகமான திரவ மருத்துவப் பிராணவாயுவை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கொண்டு சேர்த்துள்ளன.

இதுவரை 1,734 டேங்கர்களில் 30,182 மெட்ரிக் டன் பிராணவாயு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
421 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் மாநிலங்களுக்கு மருத்துவப் பிராணவாயு வழங்கப்பட்டுள்ளது.

தென் மாநிலங்களுக்கு 15,000 மெட்ரிக் டன் திரவ மருத்துவப் பிராணவாயுவை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் விநியோகம் செய்துள்ளன.
தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா மாநிலங்களுக்கு முறையே சுமார் 4,900, 3600 மற்றும் 3700 மெட்ரிக் டன் பிராணவாயு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது 10 டேங்கர்களில் 177 மெட்ரிக் டன் பிராணவாயுவுடன் 2 ரயில்கள் பயணம் செய்து வருகின்றன.

தமிழ்நாடு, உத்தராகண்ட், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, தெலங்கானா,
பஞ்சாப், கேரளா, டெல்லி, உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட், அசாம் ஆகிய 15 மாநிலங்கள் இதுவரை பிராணவாயுவைப் பெற்றுள்ளன.

இதுவரை தமிழகத்திற்கு 4941 மெட்ரிக் டன், மகாராஷ்டிராவிற்கு 614 மெட்ரிக் டன், உத்தரப் பிரதேசத்திற்கு 3797 மெட்ரிக் டன், மத்தியப் பிரதேசத்திற்கு 656 மெட்ரிக் டன், தில்லிக்கு 5722 மெட்ரிக் டன், ஹரியானாவிற்கு 2354 மெட்ரிக் டன், ராஜஸ்தானிற்கு 98 மெட்ரிக் டன், கர்நாடகாவிற்கு 3782 மெட்ரிக் டன், உத்தராகண்டிற்கு 320 மெட்ரிக் டன், ஆந்திரப் பிரதேசத்திற்கு 3664 மெட்ரிக் டன், பஞ்சாப்பிற்கு 225 மெட்ரிக் டன், கேரளாவிற்கு 513 மெட்ரிக் டன், தெலங்கானாவிற்கு 2972 மெட்ரிக் டன், ஜார்கண்டிற்கு 38 மெட்ரிக் டன், அசாமிற்கு 480 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராணவாயு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

கூடுதலாக சில ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று இரவு தங்களது பயணத்தைத் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

29 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்