இந்தியாவில் வேகமாகக் குறையும் கரோனா பாதிப்பு: அன்றாட தொற்று 80,834 ஆக பதிவு

By ஏஎன்ஐ

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 80,834 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 2ம் தேதிக்குப் பின்னர் இவ்வளவு குறைந்துள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் பின்வருமாறு:

கடந்த 24 மணி நேர பாதிப்பு: 80,834
இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 2,94,39,989

நேற்று வீடு திரும்பியோர்: 1,32,062
இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோர்: 2,80,43,446

கடந்த 24 மணி நேரத்தில் தொற்றால் இறந்தவர்கள் எண்ணிக்கை: 3,303
இதுவரை இறந்தோர் எண்ணிக்கை: 3,70,384

இப்போது நாடு முழுவதும் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 10,26,159

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசியில் புதிய மைல்கல்:

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தமிழகத்தில் 15,108 பேருக்கும், கேரளாவில் 13,832 பேருக்கும், மகாராஷ்டிராவில் 10,697 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா முழுவதும் 25 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கரோனா பெருந்தொற்றுக்கு எதிரான தனது போரில் முக்கிய மைல்கல்லை இந்தியா கடந்துள்ளது. இன்றிரவு 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின் படி, 25 கோடிக்கும் (25,31,95,048) அதிகமான தடுப்பூசிகளை நாடு இது வரை செலுத்தி உள்ளது.

மேலும், முதல் டோசை பொருத்தவரை, 20 கோடி (20,46,01,176) என்னும் வரலாற்று சிறப்புமிக்க மைல்கல்லை இந்தியா கடந்துள்ளது.
18-44 வயது பிரிவில் 18,45,201 பயனாளிகள் தங்களது முதல் டோஸ் தடுப்பூசியையும், 1,12,633 பயனாளிகள் தங்களது இரண்டாவது டோசையும் இன்று பெற்றனர். 37 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இருக்கும் 4,00,31,646 பேர் முதல் டோசையும், 6,74,499 நபர்கள் இரண்டாம் டோசையும் மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கல் தொடங்கியதில் இருந்து இது வரை பெற்றுள்ளனர்.

பிஹார், டெல்லி, குஜராத், ஹரியானா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா, உத்தரப் பிரதேசம், ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் 18-44 வயது பிரிவில் உள்ள 10 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு முதல் டோஸ் கரோனா தடுப்பூசியை இது வரை வழங்கியுள்ளன.

தமிழ்நாட்டில் மட்டும் 2209641 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும், 7950 நபர்கள் இரண்டாம் டோசையும் இது வரை செலுத்திக் கொண்டுள்ளனர். புதுச்சேரியில் 59984 பேர் முதல் டோஸ் தடுப்பூசியை இது வரை செலுத்திக் கொண்டுள்ளனர்.
தடுப்பு மருந்து வழங்கல் நடவடிக்கையின் 148-வது நாளில் (2021 ஜூன் 12), 31,67,961 டோஸ்கள் வழங்கப்பட்டன. இன்றிரவு 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின்படி, 28,11,307 பேருக்கு முதல் டோஸும், 3,56,654 நபர்களுக்கு இரண்டாவது டோஸும் வழங்கப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்