பாஜக தலைவர் ரீட்டா பகுகுணா ஜோஷி பேசியது சச்சின் டெண்டுல்கரிடம் இருக்கலாம் என்று ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் பதிலளித்துள்ளார்.
மறைந்த காங்கிரஸ் தலைவரும் உ.பி. முன்னாள் முதல்வருமான எச்.என்.பகுகுணாவின் மகளான ரீட்டா பகுகுணா ஜோஷி பாஜகவில் 2016 முதல் இணைந்து செயல்பட்டு வருகிறார். அவர் சச்சின் பைலட்டிடம் பேசியதாகவும் சச்சின் விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் சச்சின் பைலட் கூறும்போது, ''ரீட்டா பகுகுணா ஜோஷி சச்சினுடன் பேசியதாகத் தெரிவித்துள்ளார். அவர் சச்சின் டெண்டுல்கரிடம் பேசி இருக்கலாம். அவருக்கு என்னிடம் பேச தைரியம் கிடையாது'' என்று தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் முதல்வராக இருக்கும் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டது.
» ஊரடங்கிலும் பெட்ரோல்- டீசல் விலை உயர்வு: நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்
» திரிணமூல் காங்கிரஸுக்குத் திரும்பும் முகுல்ராய்?- முதன்முதலாக பாஜவுக்குச் சென்றவர்
காங்கிரஸ் கூட்டங்களில் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் தனி அணியாகச் செயல்படத் தொடங்கியதால், 19 பேரையும் கட்சியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுத்தனர். ஆனால், சபாநாயகர் நடவடிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சச்சின் பைலட் தொடர்ந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கத் தடை விதிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் தலைமை தலையிட்டு, இருவரின் ஒற்றுமைக்குப் பின்னர் ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் கெலாட் அரசு வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் காங்கிரஸில் செய்ய வேண்டிய மாற்றங்கள் மற்றும் சச்சின் பைலட் எழுப்பிய விவகாரம் குறித்து ஆராய்வதற்காக 3 பேர் கமிட்டி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. இந்தக் குழுவில் காங்கிரஸ் மூத்த தலைவர்களான அகமது படேல், கே.சி.வேணுகோபால், அஜய் மக்கான் ஆகிய 3 பேர் இடம் பெற்றிருந்தனர். இவர்கள் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் விவகாரம் தொடர்பாக ஆராய்ந்து மேலிடத்திற்கு அறிக்கை அளிப்பர் என்று கூறப்பட்டது.
இதில் அகமது படேல் கரோனா தொற்றால் காலமானார். இதனால் குழு 10 மாதங்களுக்கும் மேலாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது. சச்சின் பைலட்டின் அமைச்சரவை விரிவாக்கக் கோரிக்கையும் இதுவரை ஏற்கப்படவில்லை. இதற்கிடையே உத்தரப் பிரதேசத்தில் இருந்து காங்கிரஸ் தலைவர் ஜிதின் பிரசாதா பாஜகவில் இணைந்துள்ளார். இதனால் சச்சின் பைலட்டும் பாஜகவில் இணைவாரா என்று கேள்வி எழுந்தது.
இந்நிலையில் பாஜகவில் தற்போதைக்கு இணையப் போவதில்லை என்னும் பதிலை சச்சின் பைலட், ரீட்டா பகுகுணா ஜோஷிக்குப் பதிலளித்ததன் மூலம் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago