உ.பி. அரசியல் சர்ச்சை: அமித்ஷாவுடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு; நாளை பிரதமரையும் சந்திக்கிறார்

By செய்திப்பிரிவு

கரோனாவைக் கையாள்வதில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது அவரது சகாக்கள் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று அவர் சந்தித்தார். தொடர்ச்சியாக நாளை, பிரதமர் நரேந்திர மோடியையும் அவர் சந்திக்கிறார்.

உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அங்கு நாளுக்கு நாள் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிரான அதிருப்தி அலை அதிகரித்துவருகிறது.

இதற்கிடையில், காங்கிரஸிலிருந்து விலகிய ஜிதின் பிரசாதா உத்தரப் பிரதேச பாஜகவில் இணைந்துள்ளார். அங்குள்ள பிராமணர்கள் மத்தியில் மிகப் பிரபலமான, செல்வாக்கான முகமாக ஜிதின் பிரசாதா இருப்பதால் அவரது வருகை யோகி ஆதரவாளர்கள் மத்தியில் கிலியை ஏற்படுத்தியிருக்கிறது.

யோகி ஆதித்யநாத் தாகூர் எனப்படும் சமூகத்துக்கே அதிக ஆதரவுடன் செயல்படுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு நிலவுகிறது. இந்நிலையில், ஜத்தின் பிரசாதாவின் வருகை பிராமணர்களை ஆசுவாசப்படுத்தும், இது தேர்தலில் ஆதாயம் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், டெல்லி மேலிடத்தை சந்திப்பதற்காக யோகி ஆதித்யநாத் அங்கு முகாமிட்டுள்ளார். முதலில் அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்திருக்கிறார். தொடர்ந்து நாளை அவர் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்கவுள்ளார். பாஜக தேசியத் தலைவர் நட்டாவையும் சந்திக்கிறார்.

எப்போதெல்லாம் பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் அமித்ஷா, பிரதமர், நட்டா ஆகியோரை சந்திக்கின்றனரோ அப்போதெல்லாம் சம்பந்தப்பட்ட

அந்த மாநிலத்தில் பெரும் அரசியல் மாற்றங்கள் நிகழ்வது வழக்கமாக இருக்கிறது.

இந்நிலையில், யோகி ஆதித்யநாத்தின் டெல்லி பயணம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்