கரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு தெலங்கானாவில் தற்போது குறைந்து காணப்படு கிறது. கரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் பணியில் போலீ ஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். எல்லையில் 24 மணிநேர வாகன சோதனை உள்ளிட்ட பணிகளிலும் அவர்கள் ஈடுபடுகின்றனர். இதனால் இதுவரை 70 போலீஸார் கரோனா தொற் றால் உயிரிழந்துள்ளனர். நூற்றுக் கணக்கானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் போலீஸார் கலக்கத் துடன் பணியாற்றி வருகின்றனர்.
இதனிடையே தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் மாநில காவல் துறை இயக்குநர் மஹேந்தர் ரெட்டி தாக்கல் செய்த அறிக்கையில், “கரோனா மருந்துகளை கள்ளச் சந்தையில் விற்பவர்கள் மீது 160 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நிபந் தனைகளை மீறியதாக 8.79 லட்சம் பேர் மீது வழக்கு பதிவாகி உள்ளது. முகக்கவசம் அணியாத 4.56 லட்சம் பேரிடம் ரூ.37.94 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை கடைபிடிக்காத 48,643 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தெலங்கானாவில் கரோனா நிபந்தனைகள் கடுமையாக அமல்படுத்தப்படுகிறது” என்று கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago