இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தேர்தல் ஆணையராக அனுப் சந்திர பாண்டேவை குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.
தலைமைத் தோ்தல் ஆணையராக இருந்த சுனில் அரோரா கடந்த ஏப்ரல் 12-ம் தேதி ஓய்வுபெற்றார். இதனையடுத்து, தேர்தல் ஆணையர் சுஷீல் சந்திரா தலைமைத் தோ்தல் ஆணையராகப் பதவி உயா்வு பெற்றாா்.
இதனால் ஒரு தோ்தல் ஆணையா் பதவி காலியானது. அந்த இடத்துக்கு, தற்போது அனூப் சந்திர பாண்டே நியமிக்கப்பட்டுள்ளாா்.
வரும் 2024-ஆம் ஆண்டு பிப்ரவரியில் அவருக்கு 65 வயது பூா்த்தியாகும் வரை அவா் தோ்தல் ஆணையராகப் பதவி வகிப்பாா். உத்தர பிரதேச தலைமைச் செயலா் உள்ளிட்ட பல முக்கிய பதவிகளை அவா் வகித்துள்ளாா்.
» பாஜகவில் இணைந்தார் ஜிதின் பிரசாதா: உ.பி. தேர்தலில் காங்கிரஸுக்கு பின்னடைவு?
» மும்பையில் கொட்டித் தீர்க்கும் கனமழை: ரயில் சேவை, வாகனப் போக்குவரத்து பாதிப்பு
இவர், 1984-ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச பிரிவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியாவார். இதுதொடர்பான அறிவிக்கையை மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் சட்டமியற்றல் துறை நேற்று வெளியிட்டது.
முக்கிய செய்திகள்
இந்தியா
57 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago