கோவின் இணையதள பக்கத்தில் 12-வது மொழியாக தமிழ் மொழி சேர்க்கப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் ஏப்ரல் - மே மாதங்களில் உச்சமடைந்த கரோனா வைரஸ் தொற்று பரவல் தற்போது சீராக குறைந்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது.
கரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி முக்கிய பங்காற்றி வருகிறது. கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வரும் அதேசமயம் தடுப்பூசி செலுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.
தடுப்பூசி செலுத்துபவர்களின் வசதிக்காக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் கோவின் என்ற இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பூசி செலுத்த விருப்பமுள்ளோர் இந்த இணையதள பக்கத்தில் சென்று முன்பதிவு செய்துகொள்ளலாம். இந்த இணையதள பக்கத்தில் தடுப்பூசி போடப்படும் இடம், நேரம் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.
இணையதள பக்கத்தில் முன்பதிவு செய்ய முடியாதவர்கள், தடுப்பூசி மையங்களுக்கே நேரடியாகச் சென்று அங்கு பதிவு செய்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.
மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள கோவின் இணைய தளத்தில் 11 மொழிகள் பயன்பாட்டில் உள்ளன. தடுப்பூசி முன்பதிவிற்காக பயன்படுத்தப்படும் இந்த இணையதளத்தில் தமிழ் மொழி தவிர 11 மொழிகள் சேர்க்கப்பட்டு இருப்பதாகவும், தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் சர்ச்சை எழுந்தது.
கோவின் இணைய தளத்தில் படிப்படியாக பல்வேறு மாநில மொழிகள் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருவதாக மத்திய அரசு விளக்கம் அளித்து இருந்தது.
இந்நிலையில், கோவின் இணையதள பக்கத்தில் 12-வது மொழியாக தமிழ் மொழி சேர்க்கப்பட்டு உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago