25 கோடி கோவிஷீல்டு; 19 கோடி கோவாக்சின்;  மத்திய அரசு வாங்குகிறது

By செய்திப்பிரிவு

25 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியையும், பாரத் பயோடெக் நிறுவனத்திடமிருந்து 19 கோடி டோஸ் கோவாக்சின் தடுப்பூசியும் வாங்க மத்திய சுகாதார அமைச்சகம் ஆர்டர் செய்துள்ளது.

முழுமையான அரசின் அணுகுமுறையுடன் இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி தடுப்பூசித் திட்டத்தை இந்திய அரசு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஆதரவுடன் தொடங்கியது.

பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளுக்கு ஏற்ப மே 1-ஆம் தேதி முதல் தாராளமயமாக்கல் மூன்றாம் கட்ட தடுப்பூசி உத்தியின் கீழ் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தற்போது அடுத்தக் கட்டமாக, அரசு சுகாதார மையங்களில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட்-19 தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட உள்ளது.

தேசிய கோவிட் தடுப்பூசித் திட்டத்தின் வழிகாட்டுதல்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மாற்றங்கள் குறித்து பிரதமர் அறிவித்ததை அடுத்து உடனடியாக இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்படி சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்திடமிருந்து 25 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியையும், பாரத் பயோடெக் நிறுவனத்திடமிருந்து 19 கோடி டோஸ் கோவாக்சின் தடுப்பூசியையும் பெறுவதற்கு மத்திய சுகாதார அமைச்சகம் ஆர்டர் செய்துள்ளது.

கோவிட்-19 தொற்றுக்கு எதிரான இந்த 44 கோடி டோஸ்கள் (25+19 கோடி) தற்போது முதல் டிசம்பர் 2021 வரை இருப்பில் இருக்கும்.

கூடுதலாக, கொள்முதல் செய்வதற்கான 30 சதவீத முன்பணம் இரண்டு நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுவிட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

21 hours ago

மேலும்