ஆந்திர மாநிலத்தில் 2-ம் அலை கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மே மாதம் 5-ம் தேதி முதல் 18ம் தேதி வரை 18 மணி நேர ஊரடங்கை ஆந்திர அரசு அமல் படுத்தியது. மதியம் 12 மணி முதல் மறு நாள் காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மதுபான கடைகள் உட்பட அனைத்து கடைகளும் திறந்திருக்க அனுமதி வழங்கப் பட்டது. பஸ் போக்குவரத்து மட்டும் குறைக்கப்பட்டது.
பின்னர், கடந்த மே மாதம் 18ம் தேதியிலிருந்து 31-ம் வரையிலும், பின்னர் இம்மாதம் ஜூன்1-ம் தேதி முதல் 10-ம் தேதி வரையிலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அமராவதியில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், கரோனா தொற்று 9 ஆயிரத்தை விட குறைந்து வருவதால், ஊரடங்கை சற்று தளர்த்தலாம் என முடிவு செய்யப் பட்டது.
அதன்படி, வரும் 11-ம் தேதி முதல் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. அதன்பேரில் மதியம் 2 மணி வரை வணிக வளாகங்கள், கடைகள், அலுவலகங்கள் செயல்படும்.
இதேபோல, தெலங்கானா விலும் கரோனா தொற்று குறைந்து வருவதால் மாலை 5 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை முதல்வர் சந்திரசேகர் ராவ் இன்று அறிவிக்கலாம் என்று கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago