புனேவில் ரசாயன ஆலையில் இன்று மாலை ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கி 18 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்தனர். மேலும் சிலரைக் காணவில்லை.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள எஸ்விஎஸ் ஆகுவா டெக்னாலஜிஸ் சானிட்டைசர் தயாரிப்பு தொழிற்சாலையில் இன்று மாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்துக்கு ஏராளமான தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. ஆனால், சானிட்டைசர் ஆலை என்பதால் தீயணைப்பு வாகனங்கள் வரும் சில நிமிடங்களுக்கு உள்ளதாகவே, தீ மளமளவென ஆலை முழுவதும் பரவி எரிந்துகொண்டிருந்ததால், மீட்புப் பணிகள் மிகவும் சிரமமாக இருந்துள்ளது.
சம்பவம் நடந்தபோது தொழிற்சாலைக்குள் 37 பேர் பணியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களில் 18 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளனர். சிலரை உயிருடன் ஆனால் காயங்களுடன் மீட்டுள்ளனர். இன்னும் சிலரைக் காணவில்லை.
» மசூதியில் யாகம் நடத்துவதாக சாத்வி பிராச்சி அறிவிப்பால் பதட்டம்
» மத்திய அரசே மீண்டும் தடுப்பூசியை தனது பொறுப்பில் வாங்கி விநியோகிக்கும்: பிரதமர் மோடி உரை
தற்போது தீ முழுவதுமாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 mins ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago