நாட்டில் கோவிட் தொற்றுக்குத் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தற்போது 14,77,799 ஆக உள்ளது.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இந்தியாவில் கரோனா தொற்றினால் கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,14,460 ஆகக் குறைந்துள்ளது.
இதையடுத்து, தொடர்ந்து 10-வது நாளாக அன்றாட புதிய பாதிப்புகள் இரண்டு லட்சத்திற்கும் கீழ் பதிவாகியுள்ளது. நம் நாட்டில் கோவிட் தொற்றுக்குத் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து கணிசமாக சரிந்து, தற்போது 14,77,799 ஆக உள்ளது. இது, நாட்டில் ஏற்பட்ட மொத்த பாதிப்பில் வெறும் 5.13 சதவீதமாகும். இந்த எண்ணிக்கை 6-வது நாளாக 20 லட்சத்திற்கும் குறைவாக ஏற்பட்டுள்ளது.
சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 77,449 சரிந்துள்ளது.
» கரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மரணம் நிகழவில்லை: எய்ம்ஸ் ஆய்வில் தகவல்
» செவிலியர் மலையாளத்தில் பேசினால் நடவடிக்கை: டெல்லி மருத்துவமனை உத்தரவால் சர்ச்சை
தொடர்ந்து 24-வது நாளாக புதிய பாதிப்புகளை விட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,89,232 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள்.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாகத் தொற்றுக்கு ஆளானவர்களை விட கூடுதலாக 74,772 பேர் குணமடைந்தனர்.
இதுவரை மொத்தம் 2,69,84,781 பேர் கோவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதன்படி குணமடைந்தவர்களின் விகிதம் 93.67 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 20,36,311 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 36,47,46,522 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வாராந்திர தொற்று உறுதி வீதம் 6.54 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி வீதம் 5.62 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. தொடர்ந்து 13 நாட்களாக இந்த எண்ணிக்கை 10 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.
நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 23.13 கோடி தடுப்பூசிகளும், கடந்த 24 மணி நேரத்தில் 33,53,539 தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன.
இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 32,42,503 முகாம்களில் 23,13,22,417 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago