உலக சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். எத்தனால் கலப்புக்கான எதிர்கால திட்டம் குறித்த நிபுணர் குழுவின் அறிக்கை’-யை நிகழ்ச்சியின் போது பிரதமர் வெளியிடுகிறார்.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், மற்றும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் ஆகியவை இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்துகின்றன.
‘சிறப்பான சுற்றுச்சூழலுக்காக உயிரி எரிபொருள்களின் ஊக்குவிப்பு’ என்பது இந்தாண்டு நிகழ்ச்சியின் மையக்கருவாக இருக்கும்.
‘இந்தியாவில் எத்தனால் கலப்புக்கான எதிர்கால திட்டம் குறித்த நிபுணர் குழுவின் அறிக்கை’-யை நிகழ்ச்சியின் போது பிரதமர் வெளியிடுவார். உலக சுற்றுச்சூழல் தினத்தை குறிக்கும் வகையில், 2021 ஏப்ரல் 1-ல் இருந்து பெட்ரோலில் 20 சதவீதம் வரை எத்தனாலை கலந்து விற்குமாறு எண்ணெய் நிறுவனங்களை அறிவுறுத்தும் ஈ-20 அறிவிப்பையும், உயர்ரக எத்தனால் கலப்புகளான ஈ12 மற்றும் ஈ15-க்கான பிஐஎஸ் விவரக்குறிப்புகளையும் இந்திய அரசு வெளியிடுகிறது.
» தமிழகத்துக்கு 2,711 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம்: ரயில்வே நடவடிக்கை
» வெளிநாட்டினருக்கான இந்திய விசா ஆகஸ்ட் 31-ம் தேதி வரை செல்லுபடியாகும்
இந்த முயற்சிகளின் மூலம் கூடுதல் எத்தனால் வடிகட்டல் வசதிகள் நிறுவப்படுவதோடு, கலப்பு எரிபொருளை நாடு முழுவதும் கிடைக்க செய்வதற்கான கால அளவுகளும் வழங்கப்படும். இதனால் எத்தனால் உற்பத்தி செய்யும் மாநிலங்களிலும், அவற்றை சுற்றியுள்ள பகுதிகளிலும் 2025-க்கு முன்பாக எத்தனால் பயன்பாடு அதிகரிக்கும்.
புனேவில் மூன்று இடங்களில் ஈ100 மையங்களுக்கான சோதனை திட்டத்தையும் பிரதமர் துவக்கி வைக்கிறார். எத்தனால் கலந்த பெட்ரோல் மற்றும் அழுத்தமூட்டப்பட்ட உயிரி எரிவாயு திட்டங்களை செயல்படுத்துபவர்களாக விளங்கும் விவசாயிகளின் அனுபவம் குறித்து அறிந்து கொள்வதற்காக அவர்களுடன் பிரதமர் உரையாடுவார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
58 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
4 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago