மதராஸாவில் குர்ஆனுடன் சேர்த்து வேதங்களையும் கற்றுத் தந்த மவுலானா ஜமாலி மரணம்

By ஆர்.ஷபிமுன்னா

உத்தரப்பிரதேச மதரஸாவில் குர்ஆனுடன் சேர்த்து வேதங்களையும் கற்றுத் தந்த மவுலானா பசுலூர் ரஹ்மான் ஷாஹீன் ஜமாலி நேற்று முன்தினம் காலமானார். இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு சான்றானவரது மறைவிற்கு மீரட்வாசிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

உ.பி.யின் மீரட்வாசியான மவுலானா ஷாஹீன் ஜமாலிக்கு உடல்நலம் குன்றி தொண்டையில் தொற்று ஏற்பட்டது. இதனால், மீரட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மவுலானா ஜமாலி, பல்வேறு காரணங்களுக்காக வட மாநிலவாசிகள் இடையே மிகவும் பிரபலமானவர். இதற்கு மீரட்டின் இமாதுல் இஸ்லாம் மதரஸாவில் முதல்வராக இருந்த மவுலானா ஜமாலி தன் மாணவர்களுக்கு குர்ஆனுடன், வேதங்களையும் போதித்தது காரணம்.

இந்துக்களின் நான்கு வேதங்களிலும் ஆழ்ந்த அறிவு பெற்ற மவுலானா ஷாஹீன் ஜமாலி, இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு முன் உதாரணமாக இருந்தவர். தனது பல்வேறு நூல்களில் இரு மதங்களுக்கு இடையிலான கருத்து வேற்றுமைகளை களைய முயன்றார்.

தனது கல்வியறிவின் காரணமாக, அவர் உபிவாசிகளால் ‘சத்துர்வேதி’ எனவும், ‘பண்டிட்’ என்றும் அழைக்கப்பட்டார். அனைத்து மதத்தினராலும் மவுலானா மிகவும் மதிக்கப்பட்டார்.

இவர், உ.பி.யின் தியோபந்த் நகரிலுள்ள தாரூல் உலூம் மதரஸாவில் இஸ்லாமியக் கல்வியும், அலிகர் முஸ்லிம் பல்கலைழகத்தில் எம்.ஏ சமஸ்கிருதமும் பயின்றவர். ஆங்கிலம், இந்தி, உருது, பாரசீகம் மற்றும் சம்ஸ்கிருத மொழிகள் அறிந்தவர்.

நாடு முழுவதிலும் நடைபெறும் மதநல்லிணக்க மாநாடுகளிலும் மவுலானா ஷாஹீன் ஜமாலி தவறாமல் பங்கேற்பது வழக்கம். இதனால், மவுலானா ஜமாலியின் மறைவிற்கு மீரட்வாசிகள் அனைவரும் ஒன்றிணைந்து அஞ்சலி செலுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்