கரோனா; முக்கிய உதவி எண்கள்: டி.வி சேனல்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

கரோனா தொற்று காலத்தில் தேசிய உதவி எண்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தனியார் டி.வி சேனல்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்தின் உதவி எண் - 1075

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் உதவி எண் - 1098

சமூகநீதித்துறையின் மூத்த குடிமக்களுக்கான உதவி எண் - 14567,

நிம்ஹன்ஸ் அமைப்பின் உளவியல் ஆதரவு உதவி எண் - 08046110007

ஆயுஷ் கோவிட்-19 கவுன்சலிங் உதவி எண்- 14443,

மைகவ் வாட்ஸ் அப் எண் - 9013151515

இந்த எண்கள் மூலம் தற்போது கரோனா காலத்தில் மக்களுக்கு தேவையான உதவிகள், ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் இந்த உதவி எண்கள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி தனியார் பொழுதுபோக்கு டி.வி. சேனல்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த எண்களை பொழுதுபோக்கு டி.வி. சேனல்கள், தாங்கள் ஒளிபரப்பும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு இடையே ஒளிபரப்பி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

கோவிட் சிகிச்சை நெறிமுறை, தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி போடுதல் பற்றி அச்சு மற்றும் எலக்ட்ரானிக் ஊடகங்களில் கடந்த சில மாதங்களாக மத்திய அரசு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது என்றும் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் தனது கடிதத்தில் கூறியுள்ளது.

கோவிட்டுக்கு எதிரான போராட்டத்தில், அரசின் முயற்சிகளுக்கு உதவுவதில் முக்கிய பங்காற்றும் தனியார் டி.வி. சேனல்கள், இந்த நான்கு தேசிய உதவி எண்கள் குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்