இந்தியாவில் குறையும் கரோனா பாதிப்பு; சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 17,93,645 ஆக சரிவு

By செய்திப்பிரிவு

இந்தியாவில் கரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 17,93,645 ஆக குறைந்துள்ளது.

கரோனா 2வது அலை இந்தியாவை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. எனினும் அன்றாட பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து இறங்குமுகத்தில் இருக்கிறது. கடந்த 50நாட்களுக்குப் பிறகு தினசரி கரோனா பரவல் கணிசமாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,32,788 ஆக உள்ளது.
கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 2,83,07,832

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 1,32,788

இதுவரை குணமடைந்தோர்: 2,61,79,085

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 2,31,456

கரோனா உயிரிழப்புகள்: 3,35,102

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 3,207

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 17,93,645

இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர்: 21,85,46,667

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள தகவல்படி இந்தியாவில் இதுவரை 35,00,57,330பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 20,19,773 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

2 days ago

மேலும்