தென்மேற்கு பருவமழை இந்தாண்டு சராசரி அளவில் இருக்கும்: தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் தகவல்

By செய்திப்பிரிவு

கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 3-ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இந்தாண்டு சராசரி அளவில் இருக்கும் என தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் செப்டம்பர் வரை பரவலாக மழை பெய்யும். தென்மேற்குப் பருவமழை வாயிலாகத்தான் நாட்டிற்குத் தேவைப்படும் 75 சதவீத வருடாந்திர மழை ஜூன் முதல் செப்டம்பர் வரை கிடைக்கிறது.

தென்மேற்குப் பருவமழை சீராக இருந்தால் மட்டுமே விவசாயம் செழிக்கும். இந்த ஆண்டு இயல்பான மழைப்பொழிவு இருக்கும் என முன்னதாக கணித்து இருந்தது. அதுபோலவே இந்த வழக்கத்தை விட முன்கூட்டியே கேரளாவில் 31-ம்தேதியே பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது என்று தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்து இருந்தது.

இந்தநிலையில் முந்தைய கணிப்புக்கு பதிலாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 3 -ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் இரண் நாட்களுக்கு முன்னர் தெரிவித்தது.

தென்மேற்கு பருவமழை இந்தாண்டு சராசரி அளவில் இருக்கும் என தேசிய வானிலை முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை இந்தாண்டு சராசரி அளவில் இருக்கும் என எதிர்பார்ப்பதாக தேசிய வானிலை முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாட்டில் ஜூன் முதல் செப்டம்பர் வரை பெய்யும் தென்மேற்கு பருவமழை, இந்தாண்டு சராசரி அளவில் இருக்க வாய்ப்புள்ளது. நீண்ட கால சராசரியில் (LPA) 96 முதல் 104 சதவீதம் இருக்கும் எனத் தெரிகிறது.

ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழை அளவு நீண்ட கால சராசரி அளவில் 101 சதவீதமாக இருக்க வாய்ப்புள்ளது. கடந்த 1961ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை நீண்டகால சராசரி மழை அளவு 88 சென்டி மீட்டராக இருந்துள்ளது.

பருவமழை பரவலாக இருக்கும் எனத் தெரிகிறது. நாட்டின் பல பகுதிகளில், பருவமழை சராசரி அளவிலும், சராசரி அளவுக்கு அதிகமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு தெரிவித்துள்ளது.

மிருதுஜெய் மகாபத்ரா

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வுத்துறையின் பொது இயக்குநர் மிருதுஜெய் மகாபத்ரா கூறுகையில் ‘‘இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையை பொறுத்தவரையில் வடமேற்கு மாநிலங்களில் சராசரியாக இருக்கும். லே, லடாக் பகுதிகளில் பருவமழை சராசரியை விடவும் சற்று குறைவாக இருக்கும். அதேசமயம் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் சராசரியை விடவும் சற்று கூடுதலாக இருக்கும்’’ எனக் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE