கரோனா முன்களப் போராளிகள் பயன்படுத்தும் உபகரணங்களில் இருக்கும் தொற்றுக்களை நீக்குவதற்காக வஜ்ரா கவசம் என்ற இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.
மும்பையைச் சேர்ந்த இந்திரா வாட்டர் தயாரித்துள்ள கிருமி நாசினி இயந்திரம், முழு உடல் கவசம், என் 95 முகக் கவசங்கள், உடைகள், கையுறைகள் போன்றவற்றில் தென்படும் தொற்றின் தடயங்கள் முழுவதையும் நீக்குகிறது.
இதன் மூலம் மருத்துவ பணியாளர்கள், உடல் கவச ஆடைகள் மற்றும் இதரப் பொருட்களை கிருமியை நீக்கி, சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்த முடியும். இந்த இயந்திரம் அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதுடன், ஒருமுறை பயன்படுத்துவதால் உயிரி மருத்துவ கழிவுகள் பெருகுவதையும் தடுக்கிறது. சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்துவதன் மூலம் அதிகமாக உற்பத்தி செய்ய வேண்டிய தேவையும் குறையும்.
இதன்மூலம் முழு உடல் கவசங்கள் அதிக எண்ணிக்கையிலும், குறைந்த செலவிலும், அனைவருக்கும் எளிதாகவும் கிடைக்கும்.ஒரு சில நொடிகளிலேயே பொருட்களை முழுவதும் கிருமிநாசினியால் சுத்தப்படுத்துவது இந்த இயந்திரத்தின் சிறப்பம்சமாகும். மும்பையின் பிவண்டியில் உள்ள இந்திரா வாட்டர் நிறுவனத்தின் ஆலையில் தயாரிக்கப்படும் இந்த அமைப்பு முறை, அங்கிருந்து மருத்துவமனைகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
» தொடர்ந்து குறையும் கரோனா பாதிப்பு; 50 நாட்களுக்கு பிறகு 1,27,510 ஆக சரிவு
» லட்சத்தீவு வரைவு சட்டங்கள்; மக்களிடம் கருத்துக் கேட்கப்படும்: அமித் ஷா
“எங்களது அமைப்பு முறை, நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை 1,00,000 மடங்குக் குறைக்கும் வல்லமையைப் பெற்றுள்ளது; அதாவது, கிருமி மற்றும் நுண்ணுயிரிகள் 99.999% சதவீதம் அழியும் என்பது பல்வேறு சோதனைகளில் தெரியவந்துள்ளது”, என்று இந்திரா வாட்டர் நிறுவனத்தின் இணை நிறுவனரான அபிஜித் விவிஆர் தெரிவித்துள்ளார்.
எளிதாக எடுத்துச்செல்லும் மற்றும் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் வஜ்ரா கவசம் இயந்திரத்தின் இரண்டாவது வடிவத்தை இந்த நிறுவனம், தற்போது தயாரித்து வருகிறது. அளவில் மிக பெரிதான முழு உடல் கவசத்தை தூய்மைப்படுத்துவதற்குத் தகுந்தவாறு இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அடுக்குமாடிக் குடியிருப்புகள், தொழில்துறை நிறுவனங்கள், ஆலைகள் உள்ளிட்டவற்றில் இருந்து வெளிவரும் கழிவுநீரை சுத்திகரிக்கும் பணியில் இந்திரா வாட்டர் நிறுவனம், 20 ஊழியர்களுடன் ஈடுபட்டு வருவது குறி்ப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago