செல்போன் செயலியில் மதுபானங்கள் ஆர்டர் செய்தால் வீட்டுக்கே டோர் டெலிவரி: டெல்லி அரசு அறிவிப்பு

By ஏஎன்ஐ

மதுபானங்களை மொபைல் செயலி, அரசின் இணையதளம் மூலம் ஆர்டர் செய்தால், வீட்டுக்கே டோர் டெலிவரி செய்யப்படும் என்று முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு இன்று அறிவித்துள்ளது.

டெல்லி சுங்கவிதிகள் 2021ன்படி, எல்-13, எல்-14 உரிமம் வைத்துள்ள மதுக்கடை உரிமையாளர்கள் மட்டும் மொபைல் செயலி, இணையதளம் மூலம் பெறும் ஆர்டர்களை வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே சென்று சப்ளை செய்யலாம் எனத் தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவல் டெல்லியில் குறைந்ததை அடுத்து, நேற்று முதல் லாக்டவுன் கட்டுப்பாடுகளைப் படிப்படியாக விலக்கத் தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக கட்டுமானப் பணியாளர்கள், தொழிற்சாலைகள் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் மதுபானங்களை வீட்டுக்கே சப்ளை செய்யவும் ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து டெல்லி அரசு வெளியிட்ட அறிவிப்பில், “எல்-13 வகை உரிமம் வைத்திருக்கும் கடைக்காரர்கள் மட்டுமே மொபைல் செயலி அல்லது இணையதளம் வாயிலாக மதுபானங்களை ஆர்டர் பெற்றால் அவர்களின் வீட்டுக்கே டோர் டெலிவரி செய்யலாம்.

டெல்லியில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் வாடிக்கையாளர்களுக்கு மதுபானங்களை டோர் டெலிவரி செய்ய முடியாது. எல்-13, எல்-14 வகை உரிமம் வைத்துள்ள கடை உரிமையாளர்கள் மட்டுமே தங்கள் கடைகளுக்கு மொபைல் செயலி, இணையதளம் மூலம் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு டோர் டெலிவரி செய்ய முடியும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்