சளி மாதிரி வேண்டாம்; உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து கோவிட் பரிசோதனை: நாக்பூர் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு: 3 மணி நேரத்தில் முடிவு தெரியும்

By செய்திப்பிரிவு

உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து கோவிட் பரிசோதனை முறையை நாக்பூர் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கோவிட்-19 தொற்று ஏற்பட்டது முதல், அதற்கான பரிசோதனை கட்டமைப்புகளை இந்தியா பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் மிக எளிமையான , புதுமையான கோவிட் பரிசோதனை முறையை அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மையம்(NEERI) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யும் முறைதான் இது. இது எளிதாகவும், விரைவாகவும், சவுகரியமாகவும், சிக்கனமாகவும் உள்ளது.

இதில் 3 மணி நேரத்தில் முடிவை தெரிந்து கொள்ளலாம் என்பதால், கிராமங்கள் மற்றும் பழங்குடியின பகுதிளுக்கு இந்த பரிசோதனை பொருத்தமாக இருக்கும். இது குறித்து சுற்றுச்சூழல் வைராலஜி பிரிவு மூத்த விஞ்ஞானி, டாக்டர் கிருஷ்ணா கையர்னர் அளித்த பேட்டியில், ‘‘ சளி பரிசோதனை முறைக்கு நேரம் ஆகிறது.

மேலும், மூக்கு மற்றும் தொண்டையில் இருந்து சளி மாதிரிகளை சேகரிக்க வேண்டியுள்ளதால், இது நோயாளிகளுக்கு சற்று அசவுகரியமாகவும் உள்ளது. மேலும், இதை பரிசோதனை மையத்துக்கு கொண்டு செல்ல நேரம் ஆகிறது. வாய் கொப்பளித்து, ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யும் முறை நோயாளிகளுக்கு எளிதாக உள்ளது மற்றும் முடிவுகளை 3 மணி நேரத்தில் அறிய முடியும் என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்