தினசரி கரோனா பாதிப்பு  1,86,364: கடந்த 44 நாட்களில் இல்லாத அளவு குறைவு

By செய்திப்பிரிவு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,86,364 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 44 நாட்களுக்குப் பிறகு தினசரி கரோனா பரவல் கணிசமாக குறைந்துள்ளது.

கரோனா 2வது அலை இந்தியாவை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. எனினும் அன்றாட பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து இறங்குமுகத்தில் இருக்கிறது. கடந்த 44 நாட்களுக்குப் பிறகு தினசரி கரோனா பரவல் கணிசமாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,86,364குறைந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 2,75,55,457

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 1,86,364

இதுவரை குணமடைந்தோர்: 2,48,93,410

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 2,59,459

கரோனா உயிரிழப்புகள்: 3,18,895

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 3,660

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 23,43,152

இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர்: 20,57,20,660

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள தகவல்படி இந்தியாவில் இதுவரை 33,90,39,861 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 20,70,508 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்