ஆற்றைக் கடந்து... மலையில் நடந்து.... பழங்குடியினருக்கு கேரள மருத்துவர்கள் சேவை

By என்.சுவாமிநாதன்

இந்தியாவிலேயே முதல் கரோனா தொற்றாளர் கேரளாவில்தான் கண்டுபிடிக்கப்பட்டார். கடந்த ஆண்டு சீனாவில் இருந்து கேரளா திரும்பிய மருத்துவ மாணவிக்கு முதன் முதலில் கரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டது. அப்போதிருந்தே அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளிலும் ஆரம்ப சுகாதார மையம் அமைக்கப்பட்டது.

அந்த வகையில் அட்டப்பாடி சுற்று வட்டார பழங்குடி குடியிருப்புகளுக்கு புதூர் கிராமத்தில் இருக்கும் சுகாதார மையத்தின் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கேரளாவின் அட்டப்பாடியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது முருகுளா என்னும் பழங்குடி குடியிருப்பு. இங்கு, இருளர், முடுகர், குரும்பர் சமூக பழங்குடிகள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர்.

இந்த முருகுளா குடியிருப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு காய்ச்சலும், உடல் சோர்வும் இருப்பதாக புதூர் ஆரம்ப சுகாதார மையத்துக்கு தகவல் வந்தது. உடனே அங்கிருந்த மருத்துவர் சுகன்யா, கண்காணிப்பாளர் மருத்துவர் சுனில் வாசு, மருத்துவர் ஷைஜ் ஆகியோர் முருகுளா கிராமத்துக்கு செல்ல முடிவு எடுத்தனர்.

ஆனால், அந்தப் பயணம் சாதாரணமானது இல்லை. சாலை வழியாக செல்லவும் முடியாது. குறிப்பிட்ட தூரத்துக்குச் சென்றதும் இடையில் பவானிப் புழா ஆறு குறுக்கிடுகிறது. அந்த ஆற்றில் தண்ணீர் இல்லாத நேரங்களில் ஜீப்பிலேயே இன்னும் கொஞ்ச தூரம் செல்லலாம். ஆனால் ஆற்றில் தண்ணீர் ஓடியதால் அரசு வாகனத்தில் மேற்கொண்டு செல்ல முடியாது என ஓட்டுநர் சாஜேஸ் கூறிவிட்டார். எனவே, மருத்துவக் குழுவினரும், ஓட்டுநரும் ஆற்றுத் தண்ணீரில் நடந்தே சென்றனர். ஆற்றைக் கடந்ததும் இந்த பயணம் முடிந்து விடவில்லை. தொடர்ந்து, 4 கி.மீ. தூரத்துக்கு மலைப்பாதையில் நடந்தே சென்று முருகுளா பழங்குடி குடியிருப்பை அடைந்தனர். அங்கு முப்பதுக்கும் அதிகமானோருக்கு சோதனை செய்ததில் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் புதூர் ஆரம்ப சுகாதார மையத்துக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆற்றைக் கடந்து, மலையில் ஏறி பழங்குடி குடியிருப்பில் மருத்துவ சேவை செய்த மருத்துவர்கள் குழுவை கேரள மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வெகுவாகப் பாராட்டினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

22 mins ago

இந்தியா

5 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

மேலும்