இந்தியாவில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 20 கோடியைக் கடந்தது

By செய்திப்பிரிவு

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தில் மேலும் ஒரு புதிய மைல்கல் சாதனையாக, இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை 20 கோடியைக் கடந்துள்ளது.

தொடர்ந்து பத்தாவது நாளாக இந்தியாவில் கோவிட் தொற்றின் அன்றாட புதிய பாதிப்புகள் 3 லட்சத்திற்கும் குறைவாக ஏற்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 2,08,921 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டனர். இந்தியாவில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 24,95,591 ஆகக் குறைந்துள்ளது. மே 10- ஆம் தேதி உச்சத்தில் இருந்த கரோனா பாதிப்பு தற்போது சரிந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையில் 91,191 குறைந்துள்ளது. நாட்டில் இதுவரை ஏற்பட்ட மொத்த பாதிப்பில் தற்போது சிகிச்சை பெறுவோர் 9.19% ஆகும்.

13-வது நாளாக, அன்றாட புதிய பாதிப்புகளை விட, தினசரி குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,95,955 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். புதிதாக குணமடைந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டோருக்குமான இடைவெளி 87,034 ஆக பதிவாகியுள்ளது.

நம் நாட்டில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,43,50,816 ஆக இன்று பதிவாகியுள்ளது. தொற்றிலிருந்து குணமடைபவர்களின் தேசிய சதவீதம் 89.66% ஆக உயர்ந்துள்ளது.

நாளொன்றில் மிக அதிகமாக கடந்த 24 மணி நேரத்தில் 22,17,320 பரிசோதனைகளும், இதுவரை மொத்தம் 33,48,11,496 பரிசோதனைகளும் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வாராந்திர தொற்று உறுதி வீதம் 11.45 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதியின் விகிதம் 9.42 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. இந்த சதவீதமும், இரண்டு நாட்களாகத் தொடர்ந்து 10 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தில் மேலும் ஒரு புதிய மைல்கல் சாதனையாக, இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை 20 கோடியைக் கடந்துள்ளது.

இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட அறிக்கையின்படி இதுவரை மொத்தம் 28,70,378 முகாம்களில் 20,06,62,456 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்