விழிப்புணர்வு மூலம் கரோனாவை ஒழித்த மகாராஷ்டிர கிராமம்

By செய்திப்பிரிவு

கோவிட் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக பின்பற்றி மகாராஷ்டிரா கிராம ஒன்று கரோனா இ்ல்லாத கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா இரண்டாம் அலையை எதிர்த்து நாடு போராடிக் கொண்டிருக்கும்போது, மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ‘போயரே குர்த்’ என்ற சிறிய கிராமம் விழிப்புணர்வு, கோவிட் தடுப்பு நடவடிக்கை, தவறாத சுகாதார பரிசோதனை, தனிமைப் படுத்துதல் போன்ற நடைமுறைகளை தீவிரமாக பின்பற்றி கரோனா பாதிப்பிலிருந்து முற்றிலும் விடுபட்டுள்ளது.

1,500 பேர் உள்ள இந்த சிறிய கிராமம், மக்களின் கூட்டு முயற்சி மூலம், கரோனாவை ஒழிக்க முடியும் என்பதை நிருபித்து காட்டியுள்ளது. ஆரம்பத்தில், இந்த கிராமத்தில் நான்கு பேருக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து இங்குள்ள கிராம பஞ்சாயத்து மற்றும் சுகாதாரத்துறை ஆகியவை கொவிட் பரிசோதனை நடவடிக்கையைத் தொடங்கியது. கோவிட் அறிகுறியுள்ளவர்கள், சந்தேக நபர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்த நடவடிக்கைகளை கிராமத்தினர் பின்பற்றி, தற்போது தங்கள் கிராமத்தை கரோனா இல்லாத கிராமமாக மாற்றியுள்ளனர். இந்த கிராமத்தில் உள்ள அனைத்து குடும்பங்களும் ஆஷா மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் மூலம், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி அவ்வப்போது பரிசோதிக்கப்படுகின்றனர்.

அதே நேரத்தில், இந்த கிராமத்தில் விழிப்புணர்வு பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டது. இங்குள்ள கோயிலின் ஒலி பெருக்கிகள் மூலம் கொவிட் தடுப்பு நடவடிக்கைகள் காலையிலும், மாலையிலும் ஒலிபரப்பப்பட்டன.

இது குறித்து இந்த கிராமத் தலைவர் ராஜேந்திர அம்பேகர் கூறுகையில், ‘‘கோவிட் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கக்கூடும் என்று சந்தேகப்படும் நபர்கள் எல்லாம் கிராமத்தில் அமைக்கப்பட்ட தனிமை மையத்துக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டனர்.

இந்த நடவடிக்கை கரோனா பரவலை முறியடித்து, எங்கள் கிராமத்தை மே மாதத்துக்குள் கரோனா பாதிப்பு இல்லாத கிராமமாக மாற்ற வழிவகுத்தது. எங்கள் கிராமத்தில் பின்பற்றப்படும் நடவடிக்கைகளை, பிற கிராமங்களும் பின்பற்றினால், கரோனாவில் இருந்து விடுபட நீண்ட நாட்கள் ஆகாது’’ என்றார்.

மகாராஷ்டிராவின் நந்தெட் மாவட்டம் போகர் தாலுகாவில் உள்ள போசி என்ற கிராமம், தனிமைப்படுத்துதல் முறையை பின்பற்றி, கோவிட் பாதிப்பை ஏற்கெனவே வெற்றிகரமாக முறியடித்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்