18-44 வயது பிரிவில் ஒரு கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கோவிட் பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா மேலும் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது. தடுப்பூசித் திட்டத்தின் மூன்றாவது கட்டத்தில் 18-44 வயது பிரிவில் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி (1,06,21,235) செலுத்தப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் 53,216 பேருக்கும் புதுச்சேரியில் 5,411 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மாபெரும் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள மொத்த கோவிட் தடுப்பூசியின் எண்ணிக்கை 19.60 கோடியாக பதிவாகியுள்ளது.
இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட அறிக்கையின்படி இதுவரை மொத்தம் 28,16,725 முகாம்களில் 19,60,51,962 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
» யாஸ் புயல் முன்னெச்சரிக்கை: 15 விமானங்கள், 950 தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் தயார்
தொடர்ந்து 11-வது நாளாக, அன்றாட புதிய பாதிப்புகளை விட, தினசரி குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,02,544 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
இதன் மூலம் நம் நாட்டில் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,37,28,011 ஆக இன்று பதிவாகியுள்ளது. தொற்றிலிருந்து குணமடைபவர்களின் தேசிய வீதம் 88.69% ஐ எட்டியுள்ளது.
மற்றொரு நேர்மறை வளர்ச்சியாக, 8-வது நாளாக, தினசரி புதிய பாதிப்புகள், மூன்று லட்சத்திற்கும் குறைவாக ஏற்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் 2,22,315 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக தமிழகத்தில் 35,483 பேரும், மகாராஷ்டிராவில் 26,672 பேரும் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
கோவிட் தொற்றுக்கு இந்தியாவில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 27,20,716 ஆக இன்று குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையில் 84,683 சரிந்துள்ளது. நாட்டில் இதுவரை ஏற்பட்ட மொத்த பாதிப்பில் தற்போது சிகிச்சை பெறுவோர் 10.17% ஆகும்.
கடந்த 24 மணி நேரத்தில் 19,28,127 பரிசோதனைகளும், இதுவரை மொத்தம் 33,05,36,064 பரிசோதனைகளும் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த தொற்று உறுதி வீதம் இன்று, 8.09%மாகவும், வாராந்திர தொற்று உறுதி வீதம் 12.66% மாகவும் குறைந்துள்ளது.
தேசிய உயிரிழப்பு வீதம் தற்போது 1.14 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,454 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago