ஏர் இந்தியா நிறுவன இணையதளத்தில் சைபர் தாக்குதல்; 45 லட்சம் பயணிகளின் கிரெடிட் கார்டு, உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் கசிந்தன

By பிடிஐ


ஏர் இந்தியா விமான நிறுவன இணையதள சர்வரான எஸ்ஐடிஏ- அமைப்பில் கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட சைபர் தாக்குதலில், கடந்த 2011 ஆகஸ்ட் 11 முதல் 2021 பிப்ரவரி 2-ம் தேதிவரையிலான உலக அளவிலான பயணிகளின் தனிப்பட்ட விவரங்கள் அனைத்தும் கசிந்துள்ளன என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதில் பயணிகளின் பெயர், பிறந்த தேதி, முகவரி, பாஸ்வோர்ட் விவரம், டிக்கெட் விவரம், கிரெடிட் கார்டு விவரங்கள் உள்ளிட்ட விவரங்கள் கசிந்திருக்கலாம் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

ஏர் இந்தியா விமான நிறுவன இணையதளமான “எஸ்ஏடிஏ” சர்வரில் கடந்த பிப்ரவரி மாதம் கடைசி வாரத்தில் மேம்பட்ட, கண்டுபிடிப்பதில் சிக்கல் நிறைந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில், கடந்த 2011 ஆகஸ்ட் 11 முதல் 2021 பிப்ரவரி 2-ம் தேதிவரையிலான உலக அளவிலான பயணிகளின் தனிப்பட்ட விவரங்கள் அனைத்தும் கசிந்துள்ளன. எஸ்ஏடிஏ சர்வர் ஸ்விட்சர்லாந்தில் உள்ள ஜெனிவாவில் மையமாக வைத்து செயல்படுகிறது.

குறிப்பாக பயணிகளின் பெயர், பிறந்த தேதி, முகவரி, பாஸ்வோர்ட் விவரம், டிக்கெட் விவரம், கிரெடிட் கார்டு விவரங்கள் உள்ளிட்ட விவரங்கள் கசிந்திருக்கலாம். இதற்கு மாற்று நடவடிக்கையை எங்களின் டேட்டா பிராசஸர் தொடர்ந்து எடுத்து வருகிறது.

இருப்பினும் இந்த காலகட்டத்தில் பயணித்த பயணிகள் அனைவரும், தங்களின் பாதுகாப்புக் கருதி தங்களின் தனிப்பட்ட விவரங்களை பாதுகாப்பாக வைக்கவும். குறிப்பாக கிரெடிட் கார்டு பாஸ்வேர்டு உள்ளிட்டவற்றை மாற்றவும்.

இந்த சைபர் தாக்குதல் குறித்து விசாரணையும், தொடர் ஆய்வுகளும் நடந்து வருகின்றன, சர்வர்கள் பாதுகாப்பு கூடுதலாகப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

எந்தவிதமான அங்கீகரிக்கப்படாத செயல்பாடுகள் ஏதும் இணையதள சர்வருக்குள் நடக்கவில்லை என்பதையும் எஸ்ஐடிஏ கண்டறிந்துள்ளது.

அதேசமயம், பயணிகளின் கிரெட்டி கார்டு விவரங்கள், சிவிவி, சிவிசி எண்கள் போன்றவை ஏதும் எஸ்ஐடிஏ பிரசாஸரில் வைத்திருக்கவில்லை என்பதால், அந்த விவரங்கள் கசியவில்லை. இருப்பினும் 45 லட்சம் பயணிகளும் தங்களின் பாதுகாப்பு கருதி தனிப்பட்ட விவரங்களுக்குரிய பாஸ்வேர்ட்டை மாற்றிக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்