ஆந்திர உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்தது உயர் நீதிமன்றம்

By என். மகேஷ்குமார்

ஆந்திர மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி ஜில்லா பரிஷத் தேர்தல் நடத்தப்பட்டது. ஏப்ரல் 1-ம் தேதி அறிவிப்பு வெளியாகி ஒரு வாரத்தில் தேர்தல் நடத்துவதை எதிர்க்கட்சிகள் கண்டித்தன. தெலுங்கு தேசம் கட்சி தேர்தலை புறக்கணித்தது. இதனால் பல இடங்களில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றனர்.

சில இடங்களில் எதிர்க்கட்சி வேட்பாளர்களை ஆளும் கட்சியினர் மிரட்டுவதாகவும் கடத்துவதாகவும் புகார்கள் குவிந்தன. போலீஸார் நடவடிக்கை எடுக்காததால் கட்சிகள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இவ்வழக்குகள் மீது விசாரணை நடைபெற்றுவந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

குறைந்தபட்சம் 4 வாரங்களுக்கு முன் தேர்தல் அறிவிப்பு வெளியிட வேண்டும் என சட்டவிதியை கடைபிடிக்காமல் தேர்தலை அறிவித்து நடத்தியது செல்லாது என்பதால் அதனை ரத்து செய்வதாக உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

மீண்டும் உள்ளாட்சி தேர்தலுக் கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடலாம். கண்டிப்பாக 4 வாரங்கள் இடை வெளி இருக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்