கோவிட் ; தொடர்ந்து 7-வது நாளாக குணமடைபவர்கள் எண்ணிக்கை உயர்வு

By செய்திப்பிரிவு

இந்தியாவில் தொடர்ந்து 7-வது நாளாக கோவிட் தொற்றின் அன்றாட புதிய பாதிப்புகளை விட புதிதாக குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 3,69,077 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,23,55,440 ஆக இன்று அதிகரித்துள்ளது. தேசிய அளவில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைவோர் வீதம் 86.74 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மற்றொரு நேர்மறை வளர்ச்சியாக, நான்காவது நாளாக இன்றும் அன்றாட புதிய பாதிப்புகள் 3 லட்சத்திற்கும் குறைவாக ஏற்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 2,76,110 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதில் 77.17%, 10 மாநிலங்களில் ஏற்பட்டுள்ளது.

அதிகபட்சமாக தமிழகத்தில் 34,875 பேரும், அதைத்தொடர்ந்து கர்நாடகாவில் 34,281 பேரும், புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்தியாவில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 31,29,878 ஆக இன்று குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையில் 96,841 குறைந்துள்ளது.

நாட்டில் ஏற்பட்ட மொத்த பாதிப்புகளில் இது 12.14% ஆகும்.

தற்போதைய பாதிப்புகளில் 69.23%, 8 மாநிலங்களில் பதிவாகியுள்ளது.

இந்தியாவில் ஒரு நாளில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கையிலேயே மிக அதிகமாக கடந்த 24 மணி நேரத்தில் 20.55 லட்சத்திற்கும் அதிகமான (20,55,010) பரிசோதனைகள் செய்யப்பட்டன.

தினசரி தொற்று உறுதி வீதம் 13.44% ஆகும். தேசிய உயிரிழப்பு வீதம், இந்தியாவில் தற்போது 1.11 சதவீதமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 3,874 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் 72.25 சதவீதத்தினர், 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 594 பேரும், அதைத்தொடர்ந்து கர்நாடகாவில் 468 பேரும் உயிரிழந்துள்ளனர்.

நம் நாட்டில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள கோவிட்-19 தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 18.70 கோடியைக் கடந்துள்ளது.

இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட அறிக்கையின்படி 27,31,435 முகாம்களில் 18,70,09,792 தடுப்பூசிகள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

26 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்