குஜராத்தில் சேதத்தை ஏற்படுத்திய டவ்-தே புயல் , காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து வட கிழக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
அரபிக் கடலில் கடந்த வாரம் உருவான டவ்-தே புயலால் கடந்த சில நாட்களாக கேரளா, கர்நாடகா, கோவா, டையூ அண்ட் டாமன், குஜராத் மாநிலங்களில் பலத்த மழை பெய்து வந்தது. இந்நிலையில் இந்த புயல் நேற்று முன்தினம் இரவு, குஜராத் மாநிலத்தின் போர்பந்தர்-மாகுவா இடையே கரையை கடந்தது. கடும் புயல் உருவானதால் புயலை எதிர்கொள்வதற்காக குஜராத், மகாராஷ்டிரா மாநில அரசுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தன.
புயல் காரணமாக மகாராஷ்டிரா தலைநகர் மும்பை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நேற்றுமுன்தினம் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. புயல் கரையைக் கடந்தபோது குஜராத்தின் கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் பேய் மழை பெய்தது.
இதனைத் தொடர்ந்து டவ்-தே" புயல் வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. கம்பத் வளைகுடா மற்றும் அதன் அருகில் உள்ள வடகிழக்கு அரேபிய கடல் பகுதியில் மணிக்கு 60-70 கிலோமீட்டர் வேகம் முதல் 80 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசியது.
பின்னர ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தாழ்வு மண்டலமாக வழுவிழந்து வட கிழக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. டவ்-தே புயல் காரணமாக சௌராஷ்டிரா பகுதிகளில் லேசானது முதல் கன முதல் மிக கனமழை வரை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
25 mins ago
இந்தியா
47 mins ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago