ஆந்திராவில் உள்ள இந்து கோயில்களை கரோனா சிகிச்சை மையங்களாக மாற்ற மாநிலஇந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ளஅன்னவரம் சத்தியநாராயணசுவாமி கோயில், ஏலூரில் உள்ளதுவாரகா திருமலை, காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர்கோயில், காளஹஸ்தி சிவன் கோயில், சைலம் மல்லிகார்ஜுனர் கோயில், விசாகப்பட்டினம் சிம்மாச்சலம் நரசிம்மர் கோயில் உட்பட 13 மாவட்டங்களில் உள்ள பிரசித்திபெற்ற 16 பெரிய இந்து கோயில்களையும், இதுதவிர 30க்கும் மேற்பட்ட மற்ற இந்து கோயில்களையும் கரோனா சிகிச்சை மையங்களாக மாற்ற வேண்டுமென முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இதன்பேரில், இந்து சமய அறநிலைத்துறை சம்மந்தப்பட்ட கோயில்களுக்கு விரைவில் இதற்கான பணிகளை செய்து முடிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பெரிய கோயில்களில் 1000 படுக்கை வசதிகளும், சிறிய இந்து கோயில்களில் சுமார் 25 படுக்கை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஆந்திராவில் ஏற்கனவே 115 கரோனா மையங்கள் உள்ளன. இதில் 52,471 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மே 16-ம் தேதி நிலவரப்படி இம்மையங்களில் 17,417 பேர் கரோனாவிற்கு நோயாளிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 35,054படுக்கைகள் காலியாக இருந்தது. தற்போது ஆந்திராவில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரைமட்டுமே கடைகள், மார்க்கெட்டுகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில்ஆந்திராவில் 21,320 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 2,923 பேரும், அனந்தபூர் மாவட்டத்தில் 2,804 பேரும், சித்தூர் மாவட்டத்தில் 2,630 பேரும், விசாகப்பட்டினத்தில் 2,368 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 99 பேர்நேற்று கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
ரூ.10 லட்சம் வழங்க உத்தரவு
ஆந்திராவில் வரும் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்திருக்கும் இந்த சமயத்தில், கரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கும் பிள்ளைகளுக்கு அரசு ஆதரவு கரம் நீட்டியுள்ளது. இதுகுறித்து முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கூறுகையில், கரோனாவால் தாய்,தந்தையரை இழந்து வாடும் பிள்ளைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி, அவர்களின் பெயரில் அரசுரூ.10 லட்சத்தை வங்கி கணக்கில் செலுத்தும். இதில் வரும் வட்டியில் அந்த பிள்ளைகள் வாழும்விதத்தில் திட்டம் வகுக்கும்படிஅதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago