வாரணாசியில் கூடுதல் கட்டணம் வசூலித்த 14 தனியார் மருத்துவமனைகளுக்கு உத்தரப் பிரதேச சுகாதாரத்துறை நோட்டீஸ் அளித்துள்ளது. அடுத்த நான்கு தினங்களுக்குள் அதற்கான பதிலை பெற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கரோனா இரண்டாவது அலை பரவலில் உத்தரப் பிரதேசத்தில் அதிக பாதிப்பு உள்ளது. இதனால், ஆளும் பாஜக அரசின் சார்பில் தனியார் மருத்துவமனைக்கு கரோனா சிகிச்சைக்காகக் குறிப்பிட்டக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதை மீறும் வகையில் பிரதமர் நரேந்தர மோடியின் தொகுதியான வாரணசியில் தனியார் மருத்துவமனைகள் கட்டணம் வசூலித்ததாகப் புகார் எழுந்தது.
இதை கவனத்தில் கொண்ட உபி அரசின் சுகாதரத்துறை வாரணாசியின் 14 தனியார் மருத்துவமனைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதற்கான பதிலை இரண்டு தினங்களுக்குள் அனுப்ப வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளது. இது திருப்திகரமாக இல்லையெனில் தொற்று சட்டம் 1897 மற்றும் உத்தரப் பிரதேச தொற்று சட்டம் கோவிட் 19 ஆகியவற்றின் கீழ் நடவடிக்கையை சந்திக்க வேண்டும் என எச்சரித்துள்ளது.
தனியார் மருத்துவமனைகளுக்கு உ.பி அரசு நிர்ணயித்த கட்டணத்தின்படி, சுமாராக நோய்வாய்பட்டவருக்கு நாள் ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், ரூ.1,200 மதிப்பிலான பிபிஇ கிட் அடக்கம்.
இதே ஐசியூவில் சிகிச்சை பெற ரூ.15,000 எனவும், வெண்டிலேட்டருடனான சிகிச்சைக்கு ரூ.18,000 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிபிஇ கிட்டிற்கான ரூ.2,000 சேர்க்கப்பட்டுள்ளது.
இவை சுகாதரத்துறையின் தேசிய அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகளுக்கானது(என்ஏபிஎச்). இந்த என்ஏபிஎச் பெறாத மருத்துவமனைகளுக்கு சற்று கூடுதல் கட்டணமும் உ.பி. அரசு நிர்ணயித்துள்ளது.
இதன்படி, சுமாரானவர்களுக்கு ரூ.8,000, ஐசியூவில் ரூ.12,000 மற்றும் வெண்டிலேட்டரில் இருப்பவர்களுக்கு ரூ.15,000 என நிர்ணயித்துள்ளது. இவற்றில் கரோனாவிற்கான ஆர்டிபிசிஆர், ஐஎல்-6 ஆகிய மருத்துவப் பரிசோதனைகள் சேர்க்கப்படவில்லை.
முக்கிய நோய் எதிர்ப்பு மருந்தான ரெம்டெசிவிர் சிகிச்சையும் இக்கட்டணங்களில் சேர்க்கப்படவில்லை. வாரணாசியிலுள்ள மற்ற 35 தனியார் மருத்துவமனைகளையும் உபி சுகாதாரத்துறை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.
மதுராவின் பாஜக இளைஞர் அணி பொதுச்செயலாளர் புகார்
மதுராவின் தனியார் மருத்துவமனையான கே.எம் மெடிக்கல் ஹாஸ்பிடல் மீது கூடுதல் கட்டணம் வசூலித்ததாகப் புகார் கூறப்பட்டுள்ளது. இதை பாஜகவின் இளைஞர் அணியின் பொதுச் செயலாளரான தினேஷ் சவுத்ரி உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு இன்று அனுப்பியுள்ளார்.
இங்கு சவுத்ரியின் தாய் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் குணமாகி வீடு திரும்பும் போது அதற்கான அரசு கட்டணம் ரூ.40,000 முன்பணமாகக் கட்டியிருந்தார்.
இத்துடன் கூடுதலாக சவுத்ரியிடம் ரூபாய் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் கே.எம் மருத்துவமனையினர் வசூலித்ததாகப் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதில், மதுராவின் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரியிடம் புகார் செய்தும் தனது தாயை வீட்டிற்கு அனுப்ப மருத்துவமனையினர் மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago