இந்திய மருத்துவக் கழகத்தின் முன்னாள் தலைவர் மருத்துவர் கே.கே.அகர்வால் மறைவு 

By ஏஎன்ஐ

இந்திய மருத்துவக் கழகத்தின் முன்னாள் தலைவர் மருத்துவர் கே.கே.அகர்வால் கரோனா தொற்றின் காரணமாகக் காலமானார். அவருக்கு வயது 62.

கடந்த சில நாட்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்றிரவு 11.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.

தான் மருத்துவரான காலம் தொட்டு கே.கே.அகர்வால் மக்கள் நலன் காக்க அரும்பாடுபட்டவர். மருத்துவர் அகர்வால் இதயநோய் சிகிச்சை நிபுனர். இவர் ஹார்ட் கேர் ஃபவுண்டேஷன் ஆப் இந்தியாவின் தலைவராக இருந்தார்.

இவரின் சேவையை கவுரவிக்கும் வகையில் 2010ம் ஆண்டு பத்ம்ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

கரோனா பெருந்தொற்று முதல் அலையின்போது அவர் பொதுமக்களுக்கு கரோனா தொடர்பான விழிப்புணர்வை வீடியோக்கள் வாயிலாக தொடர்ந்து வழங்கிவந்தார். மேலும் பல்வேறு மருத்துவ அறிக்கைகளையும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு வழங்கினார்.

அவரது மறைவுச் செய்தியை சமூகவலைதளங்களில் பகிர்ந்து கொண்ட அவரது உறவினர்கள், கே.கே.அகர்வால் எனது வாழ்க்கை கொண்டாடப்பட வேண்டும் ஆகையால் என் மரணத்திற்காக வருந்தாதீர்கள் எனக் கூறியிருந்ததாகப் பகிர்ந்துள்ளனர்.

கே.கே.அகர்வாலின் மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்