மத்திய அரசின் கரோனாத் தடுப்பு ஆய்வுக் குழுவின் தலைவர் மூத்த வைரலாஜிஸ்ட் ஷாகித் ஜமீல் திடீர் விலகல்

By ஏஎன்ஐ


மத்தியஅரசின் கரோனாத் தடுப்பு ஆய்வுக் குழு மற்றும் ஆலோசனைக் குழத் தலைவர் பொறுப்பிலிருந்து மூத்த வைராலஜிஸ்ட் ஷாகித் ஜமீல் திடீரென விலகியுள்ளார்.

தன்னுடைய விலகல் குறித்து எந்தவிதமான காரணத்தையும் அவர் தெரிவிக்க விரும்பவில்லை என ஷாகித் ஜமீல் தெரிவித்துள்ளார். .

சார்ஸ்கோவிட் வைரஸின் மரபணு கூட்டமைப்பின் ஆய்வு மற்றும் ஆலோசனைக் குழு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவாக்கப்பட்டது. நாட்டில் உள்ள 10 முக்கியமான அரசின் ஆய்வகங்களை ஒன்றிணைத்து இந்த ஆய்வகங்கள் உருவாக்கப்பட்டன. இந்த ஆய்வுக்குழுவுக்கும், ஆலோசனைக் குழுவுக்கும் தலைவராக மூத்த வைராலஜிஸ்ட் ஷாகீத் ஜமால் நியமிக்கப்பட்டார். அசோகா பல்கலைக்கழகத்தின் திரிவேதி உயிர்அறிவியல் துறையின் தலைவராகவும் ஷாகித் ஜமீல் இருந்து வருகிறார்.

இந்தியாவில் தற்போது 3 உருமாறிய கரோனா வைரஸ்கள் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. அதில் பிரிட்டனின் பி.1.1.7 வைரஸ், தென் ஆப்பிரிக்காவின் பி.1.351, பிரேசலின் பி.1. வகை வைரஸ்கள் உள்ளன.இந்த வைரஸ் குறித்தும் இந்தியாவில் புதிதாகக் கண்டறியப்பட்ட இரட்டை உருமாற்ற கரோனா வைரஸ் குறித்தும் ஷாகித் ஜமீல் தலைமையிலான குழுவினர் ஆய்வு நடத்தி வந்தனர்.
இந்நிலையில் எந்தவிதமான காரணமும் வெளியிடாமல் ஷாகீத் ஜமீல் விலகியுள்ளார்

ஆனால் ஆங்கில செய்திசேனல்கள் வெளியிட்ட செய்தியில், சமீபத்தில், ஷாகித் ஜமீல் அமெரி்க்காவில் வெளிவரும் தி நியூயார்க் டைம்ஸ் நாளேட்டில் எழுதிய கட்டுரை ஒன்றில் மத்தியஅரசைப் பற்றி எழுதியுள்ளார்.

அதில், இந்தியாவில் மெதுவாக நடந்துவரும் தடுப்பூசி, கரோனாபரிசோதனையை வேகப்படுத்தாதது, தடுப்பூசிப் பற்றாக்குறை ஆகிய பற்றி மத்தியஅரசை விமர்சி்த்திருந்தார். மேலும், கரோனா வைரஸ் குறித்து ஆய்வுகளை நடத்த போதுமான ஒத்துழைப்பு மத்தியஅரசு தருவதில்லை, மத்திய அரசிடம் இருந்து எதிர்ப்பு வருகிறது எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

மேலும்