அனைத்து பக்தர்களையும் விஐபி ஆக்கியது கரோனா: திருப்பதியில் 30 நிமிடத்தில் சுவாமி தரிசனம்

By என்.மகேஷ்குமார்

கரோனா வைரஸ் தொற்றால் பல மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தினால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தற்போது அனைத்து பக்தர்களும் விஐபி பக்தர்களை போன்று அரை மணி நேரத்தில் சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.

ஜரகண்டி... ஜரகண்டி எனும் பேச்சுக்கே இடம் இல்லாமல், இதற்கு மாறாக, நிதானமாக செல்லுங்கள், தள்ளுமுள்ளு வேண்டாம், இடைவெளி விட்டு செல்லுங்கள் என ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களிடம் தேவஸ்தான ஊழியர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

கரோனா தொற்று காரணமாக தற்போது திருமலையில் அனைத்து பக்தர்களும் விஐபி பக்தர்களை போன்று, சுவாமியை தரிசித்து விட்டு வெளியே வருகின்றனர். கோயிலுக்கு செல்ல வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் நுழைந்தது முதற்கொண்டு, தள்ளுமுள்ளு கிடையாது. வெறும், நமோ வெங்கடேசாயா எனும் மந்திரத்தை மட்டுமே கேட்க முடிகிறது.

பக்தர்களும் நிம்மதியாக கோயிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்து திரும்புகின்ற னர். வெளியே வரும் போது அனைத்து சாமானிய பக்தர்களும் விஐபி தரிசனம் செய்ததை போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

இலவச தரிசன முறையை முழுமையாக திருமலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ள நிலையில், ரூ. 300 கட்டணம் செலுத்தி சிறப்பு தரிசன டிக்கெட்களை பெற்ற பக்தர்கள் மட்டுமே தற்போது சுவாமியை தரிசித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

30 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்