கோவிட் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மின் அமைச்சகத்தின் பொதுத் துறை நிறுவனங்கள் பிரதமர் நல நிதிக்கு ரூ.925 கோடி வழங்கியுள்ளன.
கோவிட் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், மின்துறை அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனங்கள், பல வழிகளில் உதவி வருகின்றன. நாடு முழுவதும் உள்ள ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு உதவ 200 இடங்களில் கோவிட் சிகிச்சை மையங்களை அமைத்துள்ளன.
இங்கு ஆக்சிஜன் படுக்கைகள் உட்பட பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கையை குறைக்க முடிகிறது.
தனிமை மையங்கள் அமைப்பது, முகக்கவசங்கள், கிருமிநாசினிகள் விநியோகிப்பது, ஆக்சிஜன் படுக்கைகள் வழங்குவது, தேசிய தலைநகர் மண்டலத்தில் தடுப்பூசி முகாம் நடத்துவது போன்ற பணிகளில் மின் அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இது தவிர பிரதமர் நலநிதிக்கு, மின் அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனங்கள் சார்பில் சுமார் ரூ.925 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லி தேசிய தலைநகர் மண்டலத்தில் 11 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் அமைப்பதற்கு தேசிய அனல் மின் நிறுவனம்(என்டிபிசி) ஆர்டர் கொடுத்துள்ளது. மேலும், சிலிண்டரில் ஆக்சிஜன் நிரப்பும் வசதியுடன் 2 ஆலைகள் அமைக்கவும் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர மாநிலங்களின் மற்ற பகுதிகளிலும் 8 ஆக்சிஜன் ஆலைகளை இந்நிறுவனம் அமைக்கிறது.
அதோடு, பெறுநிறுவன சமூக கடமை திட்டத்தின் (சிஎஸ்ஆர்) கீழ், பல மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் ஆலைகள் அமைக்கவும் உதவிக்கரம் நீட்டியுள்ளது.
இதேபோல், மின் அமைச்சகத்தின் மற்றொரு பொதுத்துறை நிறுவனமான ஆர்இசி, சிஎஸ்ஆர் திட்டத்தின் கீழ், புனேவில் உள்ள தால்வி மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் அமைக்க ரூ.2.21 கோடி நிதி அளித்துள்ளது. இதே போல் பிதோராகர், உத்தராகண்ட், ககாரியா, சத்ரா, சம்பா, பரண், மலப்புரம் ஆகிய இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் அமைக்கவும் ஆர்இசி நிறுவனம் நிதி உதவி அளித்து வருகிறது.
இந்திய மின் பகிர்வு நிறுவனம் (பிஜிசிஐஎல்), சிஎஸ்ஆர் நிதி மூலம், ராஜஸ்தானின் ஜைசல்மர், ஹரியாணாவின் குருகிராம் ஆகிய இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் அமைக்கின்றன.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago