அதிகரித்துவரும் தேவையைக் கருத்தில் கொண்டு, ரெம்டெசிவிர் மருந்தின் உற்பத்தியும் மாநிலங்களுக்கான ஒதுக்கீடும் கணிசமாக அதிகரிக்கப்படும் என மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்தார்.
ரெம்டெசிவிர் மருந்தின் தேவை ஒவ்வொரு மாநிலத்திலும் அதிகரித்திருப்பதை கருத்தில் கொண்டு அவற்றின் இருப்பை உறுதி செய்யவும், மே 23 வரை மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரெம்டெசிவிர் மருந்துகள் பற்றிய தகவல்களை மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் சதானந்த கவுடா இன்று வெளியிட்டார்.
ரெம்டெசிவிர் மருந்துகளின் உற்பத்தி மற்றும் ஒதுக்கீடு கணிசமாக அதிகரித்திருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
இதன்படி, ஏப்ரல் 21- மே 23 வரையிலான காலகட்டத்தில் தமிழகத்திற்கு 3,50,000 ரெம்டெசிவிர் குப்பிகள், புதுச்சேரிக்கு 22,000 குப்பிகள் உட்பட 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மொத்தம் 76 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
முன்னதாக ஏப்ரல் 21 முதல் மே 16 வரை மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த 7-ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பு, ஏப்ரல் 21- மே 23 வரையிலான காலகட்டமாக புதுப்பிக்கப்படுவதாக, மருந்தகத் துறையும், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகமும் அனைத்து மாநிலங்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒதுக்கப்பட்டுள்ள குப்பிகள், சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேர்மையாக விநியோகிக்கப்படுவதை மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் முறையாகக் கண்காணிக்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago