கரோனா வைரஸுக்கு எதிராக ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் 2-வது பேட்ச் இன்று ரஷ்யாவிலிருந்து ஹைதராபாத்துக்கு இன்று வந்து சேர்ந்தது.
கரோனா வைரஸுக்கு எதிராக தற்போது இந்தியாவில் கோவாக்ஸின், கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதில் மூன்றாவதாக, ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கியுள்ளது. டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் இந்தத் தடூப்பூசியை இந்தியாவில் இறக்குமதி செய்து வழங்கி வருகிறது.
இந்தத் தடுப்பூசி முறைப்படி இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டநிலையில் இந்த வாரத்திலிருந்து சந்தையில் விற்பனைக்கு வருகிறது. ரஷ்யாவிலிருந்து ஏற்கெனவே முதல்கட்டமாக ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மே1-ம் தேதி இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் 2-வது கட்டமாக இன்று தனிவிமானத்தில் இன்று ஹைதராபாத்தில் தடுப்பூசிகள் வந்து சேர்ந்தன.
ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இந்தியாவில் இந்த வாரத்தில் விற்பனைக்கு வரும் நிலையில் ஒரு டோஸ் விலையை டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் ரூ.995 ஆக நிர்ணயித்துள்ளது.
இது குறித்து ரஷ்யத் தூதர் நிகோலே குதாஷேவ் கூறுகையில் “ ரஷ்யா, இந்தியா இணைந்து கரோனா வைரஸுக்கு எதிராகப் போராடுவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த ஒற்றுமை தொடர்ந்து முன்னோக்கி நகர வேண்டும்
இந்திய மக்களுக்கு தேவைப்படும் நேரத்தில் மிகச்சரியாக தடுப்பூசிகளை இறக்குமதி செய்துள்ளோம். ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் செயல்திறன் உலக நாடுகள் அறிந்தது. கடந்த ஆண்டிலிருந்து பல நாடுகள் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை பயன்படுத்தி வருகின்றன.உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸுக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்படும் என ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
விரைவில் இந்தியாவி்ல் ஸ்புட்னிக் தடுப்பூசியை தயாரிக்கும் முயற்சிகளை எடுத்து வருகிறோம். ஆண்டுக்கு 85 கோடி தடுப்பூசிகளை தயாரிக்க இருக்கிறோம். கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இந்தியாவிடம் இருந்து இன்னும் கூடுதலாக ஒத்துழைப்பையும், கூட்டுறவையும் எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 min ago
இந்தியா
43 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago