நவீன கருவிகள் பொருத்தப்பட்ட புதிய முகக்கவசம் அணியும் தெலங்கானா மாநில முதியவர்

By என்.மகேஷ்குமார்

கரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள சிலர் முகக் கவசத்தை தங்கள் உடைக்கு ஏற்ற டிசைனில் அணிவதை பார்க்க முடிகிறது. இந்நிலையில் தெலங்கானா மாநிலம், கம்மம், சாரதி நகரை சேர்ந்த சோமய்யா என்ற ஓய்வு பெற்ற அரசு ஊழியர், ஒரு கருவியுடன் கூடிய முகக்கவசம் அணிந்து உலா வருகிறார். அவரை பலரும் வியப்புடன் பார்க்கின்றனர்.

இதுகுறித்து சோமய்யா கூறும் போது, “வழக்கமான முகக்கசவம் அணியும் போது, சுவாசிப்பதில் சிரமம் இருந்ததால் இந்த முகக்கவசம் அணிந்துள்ளேன். இதில் நன்றாக சுவாசிக்க முடிகிறது. அணிவதற்கும் வசதியாக உள்ளது. காற்றில் எவ்வித மாசு இருந்தாலும் அதை சுத்தப்படுத்தி டியூப் வழியாக நமது மூக்குப் பகுதிக்கு இந்தக் கருவி அனுப்புகிறது.

வேகமாக நடந்தாலோ, படிக்கட்டுகள் ஏறினாலோ எனக்கு மூச்சுவாங்குவதில்லை. இக்கருவியை நான் ரூ.5 ஆயிரத்துக்கு ஆன்லைனில் வாங்கினேன். இதை தினமும் ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் போதும்” என்றார். எனினும் கரோனா தொற்றுக்கு இது எந்த அளவுக்கு பாதுகாப்பானது எனத் தெரியவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

32 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்